உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

261

பெட்டிகளை வைத்துக் கொள்ளலாமென்ற ஆணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 12,616 ஊராட்சிகள் இருக்கின்றன. அவற்றில் 9,612 ஊராட்சிப் பகுதிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பைக்காண இயலும் என்பது தற்போதைய நிலை. இதில், 4,417 ஊராட்சிகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5,195 ஊராட்சிகளில் சுமார் 2,000 ஊராட்சிகளுக்குப் போதுமான நிதி இல்லாததால். அரசாங்கமே அவற்றிற்கு மானிய அடிப்படையில் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இந்த அரசின் முன் வைக்கப் பட்டுள்ளது. முதற் கட்டமாக வரும் ஆண்டில், 1990-91ஆம் ஆண்டில், ஆயிரம் ஊராட்சிகளுக்கு முழு மானிய அடிப்படையில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 114 கோடி ரூபாய் செலவாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது

தியாகிகளுடைய, மொழிக் காவலர்களுடைய பேருந்து பாஸ், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிக் காவலர்கள் ஆகியோர் ஆண்டு ஒன்றுக்கு 5,000 கிலோமீட்டர் தமிழகத்திற்குள், தமிழக போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட் டிருந்தது. இவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய டோக்கன்கள் அல்லது பயணச் சீட்டுகள் பெற்று அதனைப் பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்துவதிலே சிரமங்கள் ஏற்படுவதைப் தவிர்க்கவும், ஒவ்வொரு முறையும், போக்குவரத்துக் கழகங்களுக்குச் சென்று பயணச்சீட்டு பெறுவதற்கு அலைவதை தவிர்க்கவும், நடைமுறைச் சிக்கல் எதுவும் இன்றி வசதியாக இவர்கள் விரும்பும்போது போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் - திருவள்ளுவர் பேருந்து உட்பட, எல்லாப் பேருந்துகளிலும் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம் என்ற வரையறையை நீக்கி விருப்பப்படி தமிழகத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள். மொழிக் காவலர்கள் ஆகியோருக்குச் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக