262
நிதிநிலை அறிக்கை மீது
நிர்வாக இயக்குநரால் நிழற்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டை, (Identity Card) வழங்கப்படும். அந்த அடையாள அட்டை அடிப்படையில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அரசு
மாணவர்களுக்குப் பஸ் பாஸ். தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்கள் தமிழக க அரசின் போக்குவரத்துப் பேருந்துகளில் பள்ளி சென்றுவர சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தச் சலுகைக் கட்டணம் சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவீதமாகவும், இதரப் பகுதியில் 33.3 சதவீதமாகவும் இருக்கின்றது. இந்தச் சலுகையினால் போக்குவரத்துத்துக் கழகத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு இழப்பு 6 கோடி. இதிலே போக்குவரத்துக் கழகங்களுக்கு ஈடுகட்டும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. துவக்கக் கல்வி, இடைநிலைக் கல்விக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கின்றது. அனைத்து மாணவ, மாணவியர்களும் குறைந்தபட்சம் 8ஆவது வகுப்பு வரை கண்டிப்பாகப் பயில வேண்டும் என்ற எண்ணத்தைச் செயல்படுத்த இந்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்றது; மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடப் புத்தகம், சீருடை, காலணி மற்றும் சத்துணவு ஆகியவை வழங்குகிறது. அத்துடன் அவர்கள் பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகம் எங்கும் 8ஆவது வகுப்பு வரை பயிலும் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் போக்குவரத்துப் பேருந்துகளில் இலவசமாக வீட்டிலிருந்து பள்ளி சென்றுவர வசதிகள் செய்து தரப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இதனால், ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஏறத்தாழ 11 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும். மேலும், தற்போது சென்னையிலும், கன்னியாகுமரியிலும் 50 சதவீதச் சலுகைக் கட்டணம் உள்ளது தமிழகம் எங்கும் விரிவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் இதனால் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியிலே பயிலும்