உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

267

உரை : 25

நாள் : 25.7.1996

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1996-97ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது இந்த அவையில் நடைபெற்றுள்ள விவாதத்தில் கலந்துகொண்டு, நல்ல அறிவுரைகளையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் கூறியுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும், மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றும் இன்றும் கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்கள். இந்த அறிக்கையைத் தயாரித்து அவைமுன் வைத்துள்ள நான் மனம் புண்படும்படியாகவோ, அல்லது வருந்தி வேதனைப்படும் நிலையிலோ யாரும் எந்த எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான யோசனைகளை எடுத்துக் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. வேலாயுதன் அவர்களானாலும், தேவேந்திரகுல வேளாளர் சார்பில் உரையாற்றிய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களானாலும், ஜனதா தளத்தின் சார்பில் உரையாற்றிய திரு. வெங்கடசாமி அவர்களானாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. மணி அவர்களானாலும், பார்வேடு பிளாக் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. சந்தானம் அவர்களானாலும், சுயேச்சை என்ற நிலையிலே உரையாற்றிய திரு. வெங்கடாச்சலம் அவர்களானாலும், அ.இ.அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையிலே உரையாற்றிய திரு. திருநாவுக்கரசு அவர்களானாலும், இந்திய தேசிய லீக் சார்பில் உரையாற்றிய திரு. அப்துல் லத்தீப் அவர்களானாலும்,