268
எனக்
நிதிநிலை அறிக்கை மீது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. பழனிசாமி அவர்களானாலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உரையாற்றிய பேராசிரியர் தீரன் அவர்களானாலும், எ கு முன் முன் உரையாற்றி அமர்ந்துள்ள மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களானாலும் இந்த நிதிநிலை அறிக்கையிலே உள்ள பாராட்டக்கூடிய அம்சங்களை யெல்லாம் பாராட்டிவிட்டு, குறைகளைச் சுட்டிக்காட்டியிருப்பது, நான் நிதிநிலை அறிக்கையிலே கேட்டுக்கொண்டவாறு, அவர்களெல்லாம் இங்கு அரசுக்கு ஆசானாக இருந்து, கனிவு காட்டுகின்ற தாயாக இருந்து, கண்டிப்பு காட்டுகின்ற தந்தையாக விளங்கி, இந்த அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தர முன் வந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.
நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் கடந்த 5, 6 ஆண்டு காலத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து பேசி உட்கார்ந்து இருப்பது இன்றைக்குத்தான் என்று நான் கருதுகிறேன். அதற்காக என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகமாகப் பாராட்ட பயமாக இருக்கிறது. அவரும் அதை விரும்பமாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மனத்திற்குள்ளே விரும்பினா வெளிப்படையாக விரும்ப மாட்டார்.
உறுப்பினர் வேலாயுதன் அவர்கள், அவர்களுடைய கட்சியினுடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்களைச் சொன்னாலும்கூட பொதுவாக இந்த அறிக்கையை வரவேற் றிருக்கிறார்கள். அதைப்போல, டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும், இந்த நாட்டிலே எல்லோரும் தமிழர்கள் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்கிறோம் என்பதை மறந்துவிடாமல், இடையில் தன்னுடைய சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு வட்டமிட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். வெங்கடசாமி அவர்கள் தன்னுடைய தொகுதிக்கு என்னென்ன தேவை என்பதை இங்கே விவரித்திருக்கிறார்கள்.
தமிழ் மணம் கமழக் கமழ பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் தீரன் அவர்கள் இந்த நிதிநிலை