உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

நிதிநிலை அறிக்கை மீது

ஒன்றியம் ஆகியவை அடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா மாவட்டம், அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மாவட்டம் அமைய வேண்டுமென்ற எங்களுடைய கருத்தை நிறைவு செய்து கொள்வதற்கும் அண்ணா மாவட்டம் என்று பெயரிட்ட அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயர் நிலைக்க வேண்டு மென்பதற்காகவும், செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதிக்கு அண்ணா மாவட்டம் என்றும், ஒரு பகுதிக்கு எம்.ஜி.ஆர். மாவட்டம் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. செங்கை அண்ணா, செங்கை எம்.ஜி.ஆர். என்றெல்லாம் பெயர் இல்லை என்ற நினைப்பில் சில பேர் பெயரை விட்டுவிட்டு செங்கையை மாத்திரம் சொல்வார்கள்.

அண்ணா மாவட்டத்தில், மாவட்டத்தில், காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாசாபாத் ஒன்றியம், உத்திரமேரூர் ஒன்றியம், திரும்பெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஒன்றியம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், மதுராந்தகம் ஒன்றியம், லத்தூர் ஒன்றியம், சித்தாமூர் ஒன்றியம் ஆகிய 13 ஒன்றியங்கள் அடங்கும்.

எம்.ஜி.ஆர். மாவட்டத்தில், வில்லிவாக்கம் ஒன்றியம், புழல் ஒன்றியம், மீஞ்சூர் ஒன்றியம், சோழவரம் ஒன்றியம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், திருவாலங்காடு ஒன்றியம், திருத்தணி ஒன்றியம், ஆர்.கே. பேட்டை ஒன்றியம், பள்ளிப்பட்டு ஒன்றியம், திருவள்ளூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம், கடம்பத்தூர் ஒன்றியம், எல்லாபுரம் ஒன்றியம், பூவிருந்தவல்லி ஒன்றியம் ஆகியவை அடங்கும்.

சேலம் மாவட்டத்தில், சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஒன்றியம், பனைமரத்துப்பட்டி ஒன்றியம், அயோத்தியாப் பட்டணம் ஒன்றியம், வாழப்பாடி ஒன்றியம், மேச்சேரி ஒன்றியம், நங்கவல்லி ஒன்றியம், கொளத்தூர் ஒன்றியம், ஓமலூர் ஒன்றியம், காடையாம்பட்டி ஒன்றியம், தாரமங்கலம் ஒன்றியம், சங்ககிரி ஒன்றியம், மகுடஞ்சாவடி ஒன்றியம்,