உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

291

போகிறவருக்கு ரூ.10,000; கற்பழிப்புக்கு ஆளான பெண்ணுக்கு ரூ. 5,000; தற்காலிகமாகச் செயல்பட முடியாமல் போனவருக்கு ரூ. 2,000; ஊனமடைந்தவர்களுக்கு ரூ. 1,000; என்றும், கான்கிரீட் வீடுகள் சேதமடைந்தால் 2,500 ரூபாயும், குடிசை வீடு சேதமடைந்தால் 1,500 ரூபாயும் என்று இப்படி ஒரு 'முறை' மாவட்ட தலைவர்களுக்கு, ஆட்சித் அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கின்றது. எனவே அதை மாற்றி, ஒரு பொதுவான ஏற்பாட்டை இந்த நிதிநிலை அறிக்கையின் தொடர்பாக வெளியிட விரும்புகிறேன். இனக்கலவரங்களில் இறந்தவர்கள், காவல்துறையின் துன்புறுத்தலால் இறந்தவர்கள், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தவர்கள் ஆகியோர் குடும்பத்திற்கும், காவல் துறையினரால் கற்பழிக்கப் பட்டோருக்கும், நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனவர்களுக்கும் நிவாரணத் தொகை 50 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும். இதை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளே உடனடியாக வழங்கலாம் என்பதற்காக இந்தப் பொது ஆணை. அதிகமாகக் காயம் அடைந்தவர்களுக்கும், ஓரளவு செயல்பட முடியாதவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ. 10,000. சிறிது காயமுற்றோருக்கு ரூபாய் 5,000 அளவிலும், ஏனைய வீடுகள் மற்றும் சொத்துகள் சேதம் அடைந்தவர்களுக்கு வேறு எந்த விதமான மாற்றமும் இல்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தால் அல்லது தீயால் பாதிக்கப்படுகின்ற வீடுகளுக்கு கால்நடைகளுக்கு எல்லாம் என்ன உதவி என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமான வரிக் கொள்கை மாற்றம், அதிலே பல கோரிக்கைகள் நாள் தோறும் வந்து கொண்டேயிருக்கின்றன. மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

6

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நான் இந்த 5, 6 நாட்கள் இந்த அவையிலே உட்கார்ந்து இருக்கிற நேரம்தான் அமைதியான நேரம். இங்கேயிருந்து வெளியே சென்று அந்த மண்டபத்திற்குள்ளே உட்கார்ந்தாலும், என்னுடைய அறைக்குச்