உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

1960 நிதிநிலை அறிக்கை மீது

சென்றாலும், இந்த வரி பற்றிய கோரிக்கைகளோடு, சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர்கள், அத்தனைபேரும் வருகிறார்கள். ரொம்பப் பாதுகாப்பான இடம் என்று பேரவைத் தலைவர் அறைக்குப் போனால், அங்கே பேரவைத் தலைவர் மூலமாகவும் வருகிறது. (சிரிப்பு). அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் எதையும் புறக்கணிக்கக்கூடாது, அலட்சியப்படுத்தக் கூடாது என்று மீண்டும், இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதற்கு நிதித் துறைச் செயலாளரோடும் மற்றுமுள்ள அதிகாரிகளோடும், இங்கே நம்முடைய லத்தீப் அவர்கள் பாராட்டினார்களே, அதிகாரிகள் எல்லாம் முதலமைச்சரைப் பாராட்டினார்கள் என்று, அதைப்போல முதலமைச்சரும் அந்த அதிகாரிகளைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார் என்ற அளவில், அறிக்கை தயாரிக்க ஒரு 15 நாட்கள் கண்விழித்ததைப் போல, வரிக் கொள்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களைத் தீர்க்க 3, 4 நாட்கள் தொடர்ந்து கண் விழித்து, இரவு கூட 2.00 மணிக்குத்தான் தூங்கத் தொடங்கி, காலையில் இந்த வரி நிவாரணங்களோடு உங்கள் முன்னாலே வந்து நின்று கொண்டிருக்கிறேன்.

வரிக் கொள்கையில் மாற்றம் செய்திருப்பதாலும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங் களுக்கும் பயன் விளைவிக்கும் நோக்கத்துடன் மேல் வரி, கூடுதல் மேல் வரி, கூடுதல் விற்பனை வரி ஆகியவைகளை நீக்குகிற வகையிலும், விற்பனை வரி விதிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பினை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தியதனாலும் ஆண்டு ஒன்றுக்கு வரிக்கு உட்படும் விற்பனைத் தொகை ரூபாய் 100 கோடிக்குக் குறைவாக உள்ள நிறுவனங்களுக்குக் கூடுதல் விற்பனை வரி அறவே நீக்கப்பட்டதாலும், கரும்பு மீது அடிப்படை கொள்முதல் வரி 14.7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைத்ததாலும் மொத்தத்தில் ஏற்கனவே 306 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நிதிநிலை அறிக்கையிலே சொல்லி இருந்தேன். அந்த அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் வணிகர்களுடைய வேண்டுகோளை ஏற்றம், பொதுமக்களுடைய சிரமத்தைக் குறைக்க வேண்டு