உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

நிதிநிலை அறிக்கை மீது

மற்றொரு வேண்டுகோள். மாண்புமிகு உறுப்பினர்

2

திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வைக்கப்பட்டு, பேராசிரியர் தீரன் அவர்களால் வழிமொழியப்பட்டு பழனிசாமி அவர்களாலும் இறுதியாக திருநாவுக்கரசு அவர்களாலும் அவர் சண்டை மூட்டிவிடச் சொன்னார். (சிரிப்பு). இருந்தாலும் அவர்களாலும் நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களாலும் வழிமொழியப்பட்ட ஒன்று. ஆனால் ரூ. 10 கோடி அதிகச் செலவாகும். 10வது வரையிலும் படிக்கின்ற மாணவர்களுக்கு லவச பஸ் பாஸ் என்று இருந்தது. அதை ப்ளஸ் 2 வரையிலும் ஆக்கவேண்டுமென்று (சிரிப்பு) மாண்புமிகு உறுப்பினர் ஸ்டாலின் சொல்லி, எதிர்க்கட்சித் தலைவர் வரையிலும் வழிமொழிந்திருக்கிற காரணத்தால் - மகனுக்காக அல்ல, மாண்புமிகு அவை உறுப்பினர்களுக்காகவும், மாணவர்களுக் காகவும் உறுப்பினர்கள் அத்தனை பேருடைய வேண்டுகோளை ஏற்று பிளஸ் 2 வரையிலும் இலவச பஸ் பாஸ் (மேசையைத் தட்டும் ஒலி) மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து, இந்த நிதிநிலை அறிக்கை குறித்து நல்ல கருத்துக்களைக் கூறிய அனைவருக்கும் நல்ல ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொன்ன உங்கள் அனைவருக்கும்

என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த அளவிலே அமைகின்றேன். வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இவ்வளவு சலுகைகளுக்கு அப்புறம் இன்னும் ஒரு நிமிஷமா?

திரு. எஸ். திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தார்கள். அதில் பேபி மில்க் புட், குழந்தைகள் சாப்பிடுகிற உணவு, அது ஒன்று. ஏழைகள் பயன்படுத்துகின்ற சைக்கிள் தோழமைக் கட்சியினுடைய சின்னம் வேறு அந்த சைக்கிளுக்கும், குழந்தைகள் பயன்படுத்துகின்ற உணவிற்கும், 3.6 லிருந்து 4% ஆக ஆகி இருக்கிறது. ஆகவே குழந்தைகள் பயன்படுத்துகிற உணவு, சைக்கிள், ஏழைகள் பயன் படுத்துகிற வாகனம், இந்த இரண்டிற்கும் முதலமைச்சர் அவர்கள் குறைத்து அறிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.