கலைஞரின் சட்டமன்ற உரைகள்
299
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அடுத்த நிதி நிலை அறிக்கைக்கும் சில விஷயங்கள் தேவை
மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. டி. சுதர்சனம்.
அண்ணா
திரு. டி. சுதர்சனம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல்வேறு மாவட்டப் பிரிவினைகளை இங்கே அறிவித்தார்கள் அறிவிக்கப்படுகின்றபோது செங்கை-எம்.ஜி.ஆர். மாவட்டம், மாவட்டம் இரண்டிலுமே குறிப்பாக சைதாப்பேட்டை வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இந்த இரண்டு வட்டங்கள் இரண்டு மாவட்டங்களிலுமே வருகின்றன. தனித் தனி வட்டங்களாகப் பிரிக்கப்படுமா? அல்லது முன்பு இருந்ததைப் போல ஒரே வட்டமாக அது இருக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தனித்தனி வட்டங்களாக அது பிரிக்கப்படும். அது பற்றிய சந்தேகம் தேவையில்லை. நான் முதலிலே சொல்லி இருக்கிறேன். அந்த வட்டங்கள், கோட்டங்களைப் பற்றிய விவரமான அறிக்கை ஒன்று அரசின் சார்பாக நாளைக்கு வெளியிடப்படும்.