உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

நிதிநிலை அறிக்கை மீது

தயாராக இருக்கிறது இருக்கிறது என்பதையும் இந்த நிதிநிலை அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மகளிருக்கு மேலும் பணிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற முறையிலே, உரிமைகளை அளிக்கவேண்டும் என்ற முறையிலே காவல் துறையிலே சரி பாதி ஆண்கள், சரி பாதி பெண்கள் என்ற நிலையை உருவாக்க முதல் கட்டமாக இந்த ஆண்டு பெண் காவலர்கள் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

மக்கள் நலப் பணியாளர்கள் திட்டத்தில்கூட 17,500 மகளிர் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

மற்றும் ஒன்று, நமக்கு நாமே என்ற ஒரு திட்டம் இந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனு நீதித் திட்டத்தை நீங்கள் அறிவீர்கள். அதை மேலும் மேம்படுத்தி மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்துகொள்ள முன்வரும் மனப்பான்மையை வளர்க்கும் நிலைக்கு வழிகோலும் வகையில் நமக்கு நாமே என்ற திட்டத்தைக் கொண்டு வருவது பற்றி இந்த நிதிநிலை அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். தற்போது நடைமுறையிலே உள்ள மனுநீதித் திட்டத்தில், அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அறிந்து, அவற்றின்மீது விசாரணை செய்து, உடனுக்குடன் முடிவெடுத்து அறிவித்து செயல்படுத்தப்படுகிறது. அதிலே உள்ள குறைபாடுகளைக்கூட

உறுப்பினர்கள் தெரிவித்திருகிறார்கள் நான்

அதை

மறுக்கவில்லை. அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதற்கும் மேலே ஒரு படி சென்று அந்தக் கிராமத்திலே ஒருங்கிணைந்த மனித ஆற்றலை உருவாக்கி அரசின் உதவிக் கரத்தைக் கொண்டு அந்தக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், நமக்கு நாமே என்ற திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

அது மாத்திரம் அல்ல; நம்முடைய பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலே கிராமச் சபைகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. நாம் இங்கே யூனியனைப் பற்றிப் பேசுகிறோம்; மாவட்ட ஊராட்சி மன்றத்தைப் பற்றி பேசுகிறோம்;