உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

பேரூராட்சியைப் பற்றிப் பேசுகிறோம்.

309

மாநகராட்சி, நகராட்சியைப் பற்றியெல்லாம் பேசுகிறோம். இந்த ஊர்ச் சபையைப் பற்றிப் பேசவில்லை. இந்த ஊர்ச் சபைதான் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

ஊர்ச் சபை என்றால், என்றால், ஊராட்சி மன்றத்திலே வாக்களித்தார்களே, அந்த வாக்காளர்கள் அத்தனைபேரும் கூடி ஆண்டில் ஒவ்வொரு வாரமும் என்று இல்லாவிட்டாலும், முடியாவிட்டாலும்கூட, 2 மாதத்திற்கு ஒரு முறை, 3 மாதத்திற்கு ஒரு முறை அந்த ஊர்ச் சபை கூட்டப்பட்டு, வாக்காளர் களுடைய சபை கூட்டப்பட்டு, அந்த ஊரினுடைய தேவைகள் எல்லாம் அவர்கள் மூலமாக உணரப்பட்டு, எந்தெந்த அரசுத் திட்டங்களை அந்தத் தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்தலாம், எதை உள்ளூர் மக்களின் தன்னார்வத் தொண்டோடு அரசு உதவியோடு நிறைவேற்றலாம் என்பவைகளையெல்லாம் வரையறுப்பதற்காக இந்த நமக்கு நாமே திட்டம் பயன்படும் என்று நான் கருதுகின்றேன்

தற்போதுகூட தன்னார்வலர், மாணவர்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்தோர் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே மரம் நடுதல், துப்புரவுப் பணி செய்தல், பள்ளி, சத்துணவு மையம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றை வெள்ளையடித்தல் போன்ற பயனுள்ள பணிகளை எல்லா இடங்களிலும் செய்யாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்து வருகின்றார்கள்.

இந்தப் பணி சிறப்பாக நடைபெறுவதற்காக ஒரு திட்டமே வகுக்கப்பட்டு ஆந்திராவிலும், கேரளாவிலும் நடைமுறையிலே இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அதைப்பற்றி நான் ஆந்திர முதலமைச்சரிடத்திலே தொடர்பு கொண்டு அந்தக் குறிப்புக்களையெல்லாம் பெற்றிருக்கிறேன். இந்த நடை முறையிலே உள்ள ஆந்திரா, கேரளா திட்டங்களை நமது அதிகாரிகளை அங்கேயே அனுப்பி, நடைமுறைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்து அவற்றின் சிறப்பான அம்சங்களை இந்த நமக்கு நாமே திட்டத்திலே சேர்க்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம். இது நான் அறிவித்த நிதிநிலை அறிக்கை அல்ல; நீங்கள்