உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

நிதிநிலை அறிக்கை மீது

எல்லோரும் சேர்ந்து அறிவித்த நிதி நிலை அறிக்கை. (மேசையைத் தட்டும் ஒலி). திருநாவுக்கரசு, நான்தான் முதலிலே சொன்னேன் என்று கூடச் சொன்னார். அவருக்கு முன்பு சில உறுப்பினர்கள் இங்கே பேசியிருக்கிறார்கள். இருந்தாலும்கூட அவர்கள் எல்லாம் உறுப்பினர்கள்; அவர் தலைவர். ஒரு கட்சிக்கு, இங்கே. எனவே அதை நான் எடுத்துக் கொள்கின்றேன்.

இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் சார்பாகத் தரப்படுகின்ற அந்த உரிமையைப் போல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தரப்படவேண்டும் என்ற கோரிக்கை என்று சொல்ல மாட்டேன் - உரிமை உரிமை முழக்கம் இங்கே வைக்கப்பட்டு, அந்த முழக்கத்தை முடக்கிவிடாமல் இந்த ஆண்டிற்கு எப்படியாவது அறிவித்து விடுவோம் என்ற அளவில் அதற்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கேட்டார் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்த 25 இலட்சம் ரூபாய்க்கான பணிகள் நடைபெறுவதற்கு (மேசையைத் தட்டும் ஒலி ) ஆவன செய்யப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தின் நடைமுறைகள் மத்திய அரசின், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நடைமுறைகளை ஒட்டியே இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மத்திய அரசுத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களை உங்கள் முன்னால் நான் படித்துக் காட்டவும் விரும்புகின்றேன். மத்திய அரசுத் திட்டம், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - முக்கிய அம்சங்கள்.

1. நாடாளுமன்ற

உறுப்பினர் ஒவ்வொருவரும் அவர்களுடைய தொகுதியில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைத் தேர்வு செய்து அவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பரிந்துரைக்க உரிமை உண்டு.

2. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம், தான் தேர்வுசெய்த பணிகளின் பட்டியல் ஒன்றைக் கொடுப்பார். மாவட்ட ஆட்சித் தலைவர் இத்திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளைப்