உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

315

கோடியாக உயரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது ஏற்கெனவே கடந்த ஆண்டு 1996 97ல் ரூ.646 கோடி ஒதுக்கப்பட்டதற்கு மாறாக ரூ. 1174 கோடி ஒதுக்கப்படுகிறது இந்த 8 சதவீதம் போதாது என்ற கருத்து சொல்லப்பட்டிருக் கின்றது. கேரளத்தில், கர்நாடகத்தில், மேற்கு வங்காளத்தில் எல்லாம் உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. நான் அதை அப்பட்டமாக மறுக்க விரும்பவில்லை. ஆய்வு செய்யவே விரும்புகின்றேன். ஆனால், அவர்கள் சதவீதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த உள்ளாட்சி மன்றங்களுக்குத் தருகின்ற functions பொறுப்புகள் என்னென்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்தப் பொறுப்புக்களை மாநில அரசே இன்றைக்கு எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சில பொறுப்புகளை மாத்திரம்தான் உள்ளாட்சி மன்றங்களுக்குக் கொடுத்திருக்கிற காரணத்தால், இந்த 8 சதவீதம் போதுமானதாக இருக்கலாம் என்றுதான் ஒதுக்கியிருக்கின்றோம். உள்ளாட்சி மன்றங்களுக்கு மகப்பேறு மையங்கள், மருந்தகங்கள், பாசனம், குடும்ப நலம் முதலியவை குறித்து அளிக்கப்படும் குறிப்பிட்ட பணிக்கான மானியங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73, 74ஆம் திருத்தங்களின்கீழ் செயல்பட பகிர்வு முறை குறித்து முடிவு எடுக்கும் வரையில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. எனவேதான், நாம் நிதி ஒதுக்குகிற நேரத்திலே, எத்தனை சதவீதம் என்று ஒதுக்குகிற நேரத்தில், இந்தப் பணிகளையெல்லாம் நாமே செய்து வருகின்ற காரணத்தால், அவர்களுக்கு இந்தப் பணிகள் இல்லாத காரணத்தால் இது போதும் என்று நாம் கருதுகின்றோம். தெரு விளக்கு, குடிநீர் வழங்கல் போன்றவைகளுக்கான மூலதன மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன், பரவலாக்கப்பட்ட மாவட்ட திட்ட நிதிகளும் - Decentralised Dis- trict Plan allocation உள்ளாட்சி மன்றங்களுக்கு அரசினால் அளிக்கப்படுகின்றன. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில், அவர்கள் நிதிக் குழுவின் பரிந்துரைகள் மீதான இறுதி முடிவு, முறையே 1997ஆம் ஆண்டு மார்ச் 14, 17 ஆகிய நாட்களில் அவர்கள் அளிக்கவிருக்கின்ற நிதிநிலை