உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

நிதிநிலை அறிக்கை மீது

இச்சட்டம் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் பொருள்களை வாங்குவதற்கும் பொருந்தும் சட்டம்.

2. குறிப்பிட்ட மதிப்பிற்கு அதிகமான திறந்த ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் (Open Tender) செய்தித்தாள்களில் கட்டாயமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

3. மாவட்ட மற்றும் மாநில அளவில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை (Tender Bulletin) வெளியிடப்பட வேண்டும். இந்த அறிக்கையில் தகவல்கள் வெளியிடப்படுவது கட்டாயமாக்கப் படும். செய்தித்தாள்களிலோ அல்லது ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கையிலோ தகவல்களை வெளியிடாத ஒப்பந்தப்புள்ளி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. ஒப்பந்தப்புள்ளிமீது பிறப்பித்த இறுதி ஆணைகள் குறித்த விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையிலேயே அறிவிக்க வேண்டும்.

படும்.

ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் விநியோகம் பரவலாக்கப்

துறை

இச்சட்டம் அரசுத் துறைகள், அரசுத் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டப்படி அமைந்த வாரியங்கள், கழகங்கள், (Statutory Boards) போன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். ஏற்கெனவே இருந்த சிங்கிள் டெண்டர் முறையினால் எவ்வளவு ஊழல்கள் பெருகியிருக்கின்றன என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஒரு

அதைப்போலவே கனிமத் துறையில் விதி 39 என்ற ரு பிரிவைச் சேர்த்ததன் காரணமாக, அவர்கள் விருப்பத்திற்கேற்ப யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற நிலை இருந்தது. அதன் காரணமாக எத்தனை கோடி ரூபாய் இந்த அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதை உறுப்பினர்கள் அறிவார்கள். எனவே, இந்தச் சட்டம் எல்லா வகையிலும் வரவேற்கத்தக்கது; நீங்கள் தருகின்ற யோசனைகளையும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்படுகின்ற சட்டம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.