உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

நிதிநிலை அறிக்கை மீது

எதுவேண்டுமானாலும் வரலாம், புயல் வரலாம், சூறாவளி வரலாம், கொந்தளிப்பு வரலாம். பூகம்பமே வரலாம். நான் மாறவே மாட்டேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த நேரத்திலே ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அவைக்குச் சொல்லிக்கொள்கிறேன். மின்சாரம் தொடர்புடையதாக. இன்னும் நிறைய கம்பங்கள் நடப்பட வேண்டும். விளக்குகள் கிராமங்களுக்கு வேண்டுமென்றெல்லாம் உறுப்பினர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நேற்றையதினம் இதைப் பற்றி நம்முடைய மின்துறை அமைச்சர் அவர்களும், உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களும் அதிகாரிகளையும், மற்றவர்களையும் வைத்துப் பேசி, ஒரு நல்ல செய்தியைத் தந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மாநிலத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் புதிதாக 76,000 கம்பங்கள் நட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அதை நான் இந்த அவைக்கு புதிய கம்பங்கள் நட்டு 76,000 மின் விளக்குகள் பொருத்தப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஆர். சொக்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு விளக்கத்தைக் கேட்டுவிட்டு அதற்கு பிறகு மேசையைத் தட்டலாமா என்பதை முடிவு செய்ய விரும்பு கின்றேன். ஏனென்றால், இப்போதும் நீங்கள் மின்வாரியத்திட மிருந்து வழங்குகின்றீர்கள். ஆனால் ஒரு விளக்கு நகராட்சிப் பகுதிக்கு வேண்டுமென்றால் 3,000 ரூபாயோ, 4,000 ரூபாயோ டெபாசிட் கொடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். அது கூடுதல் பளு. இந்தப் பளுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமத்தாமல் நீங்கள் 76,000 மின்கம்பங்கள் அமைத்துத்தருவீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக இரு கையையும் வைத்து ஓங்கித் தட்டுவேன் மேசையை.

மாண்புமிகு திரு. கோ. சி. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எனக்கு உதவுகிறார்கள் என்று கூட சொல்லலாம். ஆனால் இது கூட்டு மந்திரி சபை. முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இயங்குகிறோம். நாம் அத்தனைபேரும்