உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

333

ஒன்றுபட்டு பணியாற்றுகிறோம். அந்த வகையில் எடுத்து கணக்குப் பார்த்தால் அதிகாரிகள் ரூ. 5,200க்குக் கீழே இந்தப் பணியை எங்களால் செய்ய முடியாது என்று, அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் அறிவித்துவிட்டார்கள். அதற்குப் பின்னால் என்னால், இந்தச் சுமையைத் தாங்க முடியாது என்று எடுத்துக் கூறிய பிறகு ரூ.3,640 என்ற முடிவு எடுத்து, அதற்கு மேல் ஆகும் நிலை ஏற்பட்டால் இரு துறையினரும் முதலமைச்சர் அவர்களைக் கலந்து, இதை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது முடிவு செய்யப்படும் என்றுதான் இதை ஏற்படுத்தினோம். இது ஒரு அதிகமான கட்டணம் என்று சொல்ல இயலாது.

திரு. ஆர். சொக்கர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, புதிய கம்பங்கள் நடவேண்டியிருந்தாலும் நீங்கள் அந்தப் பணத்தை வசூலிப்பது கூட தவறில்லை. பொருளாதார நெருக்கடியை நானும் உணர்ந்தவன்தான். ஆனால், ஏற்கெனவே இருக்கக்கூடிய கம்பங்களில் ஒரு விளக்கு வேண்டுமானாலும் அதிகமான கட்டணத்தை செலுத்தச் சொல்கிறார்கள். அதற்கு விளக்கம் அளித்தால் நல்லது.

மாண்புமிகு திரு. ஆற்காடு நா. வீராசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. அப்படி விவாதிக்கப்படுகின்ற நேரத்தில் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், மின் வாரியத்துறை அதிகாரிகளும் கம்பங்கள் இருந்து, சோக்கும் இருந்தால், விளக்கிற்கு மட்டும்தான் பணம் வசூலிக்க வேண்டுமே தவிர கம்பத்திற்குப் பணம் பண்ணக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

வசூல்

திரு. சி. ஞானசேகரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...

டாக்டர் அ. செல்லக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...

மாண்புமிகு பேரவைத் தலைவர் பேச வாய்ப்பு ல்லை என்றால், உடனே எழுந்திருப்பதா? இன்னும்