உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

347

பொன்னி அரிசி 1996ல் 12.95 ஆக உயர்ந்தது. அவர்கள் ஆட்சியில் 6 ரூபாய் அரிசி இரண்டு மடங்கு 12 ரூபாயாக உயர்ந்தது. அதுதான் இன்றைக்கு சில இடங்களில் 14 ரூபாய், 13 ரூபாயாக இருக்கிறது.

நேற்றைக்குக்கூட நம்முடைய உணவு நம்முடைய உணவு அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை சென்றிருந்தார். அங்கேயிருந்து வெவ்வேறு வகை அரிசி சில பொட்டலங்களை வாங்கிக் கொண்டு வந்தார். அதில் இந்த அரிசியினுடைய விலையே கிலோ 8 ரூபாய், இன்னொன்று 72 ரூபாய். இது இரண்டும் வெளி மார்க்கெட்டிலே கிடைக்கிற அரிசிகள்தான்.

(மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு அரிசிப் பொட்டலங்களை அவைக்குக் காட்டினார்.)

இந்த அரிசி நல்ல அரிசி. 71/2 ரூபாய்க்கும் 8 ரூபாய்க்கும் அங்கே கிடைக்கிறது. வெளி மார்க்கெட்டிலே. நம்முடைய ரேஷன் கடைகளிலே அல்ல. திருவண்ணா மலையிலே கிடைக்கிறது வேண்டும் என்றால், திருவண்ணாமலை உற்சவத்திற்குப் போய்விட்டு அரிசி வாங்கிக் கொண்டு வரலாம். (சிரிப்பு). ஆனால், திருவண்ணாமலை விலையே எல்லா இடத்திலேயும் விற்கிறதா என்றால் இல்லை. நான் அதை ஒத்துக்கொள்கிறேன். மாநில அளவிலே ஒரு சராசரி கணக்கைப் பார்க்கும்போது, மாநில அளவுக் கணக்கில் வெளி மார்க்கெட்டிலே 14 ரூபாய் என்றும், சன்னம் 9 ரூபாய் 49 காசு, சாதாரணம் 8 ரூபாய் 78 காசு என்ற அளவிற்கு வெளி மார்க்கெட்டிலே விற்றுக் கொண்டிருக்கிறது.

பச்சரிசியும் அப்படித்தான். பொன்னி வந்து, செல்வி ஜெயலலிதா ஆட்சியிலே ஜூன் மாதம் 1991 ஆம் ஆண்டு ரூ.7.23. 1996லே ஏப்ரல் மாதம், அவர்கள் ஆட்சியிலே இருக்கும்போதே 12 ரூபாய் 20 காசு. அது 14 ரூபாய்க்கு உயர்ந்தது. இப்போது குறைய ஆரம்பித்திருக்கிறது.

நேற்றைக்கு கோயம்பேடு மார்க்கெட்டிலேகூட காய்கறி விலை மளமளவென்று இறங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். இறங்குவதும் ஏறுவதும், இன்னும் ஒருமாதம் கழித்து. கோடைக்காலம் வந்தது என்றால் அது ஏறலாம். அது வேறு