உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

19நிதிநிலை அறிக்கை மீது

விவகாரம். ஆனால் பருப்பு வகைகளுக்கு நாம் வரி விதிப்பில் சில அக்கறை காட்டி, ரத்து செய்தோம், குறைத்தோம். அதன் காரணமாக முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும், துவரம் பருப்பைப் பொறுத்தவரையில். 1991 ஜூன் மாதம் ஜெயலலிதா ஆட்சியில் 17 ரூபாய் 47 காசாக இருந்தது. அந்த ஆட்சி முடியும் தருவாயில் 31 ரூபாயாக இருந்தது. இப்போது 25 ரூபாய் 19 காசு, உளுத்தம் பருப்பு ஜூன் 1991லே 13 ரூபாய் 18 காசு இருந்தது. அது ஏப்ரல் 1996லே 28.18 ரூபாய் ஆக உயர்ந்தது. இப்போது ரூபாய் 23.90 என்ற அளவிற்கு இறங்கியிருக்கிறது. கடலைப் பருப்பு ஜூன் 1991லே ரூ.10.61 ஆக இருந்தது. ஏப்ரல் 1996லே ரூபாய் 15.14 ஆக உயர்ந்து இப்போது கடலைப் பருப்பு 17 ரூபாயாக ஆகியிருக்கிறது. நான் ஒத்துக் கொள்கிறேன். மறுக்கவில்லை, உயர்ந்தது. ரூ.10, 15 அகியது. ரூ.5 அதிகம் ஆச்சு, இப்போது ரூ.2 அதிகம் ஆகியிருக்கிறது. பாசிப்பருப்பு ரூ. 11.76 ஆக இருந்து ரூ.21.35 ஆக உயர்ந்தது. அவர்களுடைய காலத்திலேதான், 1991லேயிருந்து 1996 வரை.

ஆட்சிக்

எண்ணெய் வகையிலே, கடலை எண்ணெய் ரூ.37.15 ஆக ஜூன் 1991லே இருந்து, ரூ. 39.73 ஆக 1996-லே உயர்ந்து, இப்போது ரூ.36.78 ஆகக் குறைந்திருக்கிறது. இது சில இடங்களிலே வித்தியாசப்படலாம். நல்லெண்ணெய் ரூ.33.93 என்று ஜூன் 1991லே இருந்து. ஏப்ரல் 1996லே ரூ.43.40 என்று ஆகி, இப்போது ரூ.38.95 என்ற அளவிற்குக் குறைந்திருக்கிறது.

ரூ.

41

ரூ.

35

அதைப்போலவே மிளகாய் வற்றல் ரூ. 29 ஆக இருந்து, ஆக உயர்ந்து, இப்போது ஆகக் குறைந்திருக்கிறது. புளி ரூ. 9.93 ஆக 1991லே இருந்து, 1996 லே ரூ.19.83 ஆக ஆகி இப்போது, ரூ. 20, 21, 22 என்ற அளவிற்கு வந்திருக்கிறது. எனவே, இந்த விலைவாசி உயர்விலே மாநில சர்க்காருக்கு மாத்திரம்தான் பொறுப்பு என்று யாரும் இங்கே பேசியவர்கள், எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள் அல்லது திருநாவுக்கரசு போன்றவர்கள் யாருமே சொல்லவில்லை. மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசுக்குத்தான் முழுப் பொறுப்பு, பெரும்பங்கு