உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

365

சத்துணவுச் சிறார்களுக்கு வாரம் ஒரு முறை முட்டை வழங்குகின்ற திட்டம்;

மூவலூர் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

கேளம்பாக்கம் அருகில் பெண் தொழில் முனைவோர் களுக்கு உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா; ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் 200 ரூபாயிலிருந்து, 4, 5 மாதங்களுக்கு முன்புதான் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 400 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள செய்தி; ஆதி திராவிடர்களுக்கு தொழில் நடத்த கடன் வழங்க தாட்கோ மூலம் வங்கிக்கு நிகராக ஓர் ஏற்பாடு;

நெசவாளர் பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து நல்ல முடிவுகாண ஒரு குழு அமைப்பு;

அமைப்பு ரீதியில் இல்லாத தொழிலாளர்களுக்கு நல

வாரியம்;

நெசவாளர், மீனவர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்றோர் போன்ற நலிந்த பிரிவினருக்கான ஓய்வூதியம் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்வு;

ஆஸ்பெஸ்டாஸ் தகடு, முதல்கட்டமாக சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி மற்றும் நெல்லையில் ஓலைக் குடிசைகளுக்கு மாற்றாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகள்;

சமத்துவபுரத்திற்கு 17.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு; சுதந்திரப் பொன்விழாவையொட்டி, 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்திலே உயிர்நீத்த சமூக நீதிக் காவலர்களுடைய குடும்பங்களுக்கு உதவித் தொகை: எவ்வளவு என்பதை அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம். இன்னும் அதிகம் சேர்த்து இறுதியிலே அறிவிக்க இருக்கின்றேன். 30 இலட்ச ரூபாய்ச் செலவிலே தியாகிகள் மணிமண்டபம்; 50 இலட்ச ரூபாய்ச் செலவிலே தியாகி விஸ்வநாத தாஸ் இல்லம்; 50 இலட்ச ரூபாய்ச் செலவிலே பூலித்தேவன் நினைவுச்