366
நிதிநிலை அறிக்கை மீது
சின்னம்; 1 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமம்; 15.50 இலட்ச ரூபாய்ச் செலவில் ஜீவா நினைவிடம்; 7.40 இலட்ச ரூபாய்ச் செலவில் நேதாஜிக்கு சிலை; அம்பேத்கர் மணிமண்டபம் தொடக்கம்; 84.94 இலட்ச ரூபாய் செலவில் 5 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடந்த வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு;
ய
அரசு அலுவலர்களுக்கு 1.1.1996லிருந்து மத்திய அரசின் திருத்திய ஊதிய விகிதம். நகர ஈட்டுப்படி, இரட்டிப்பு வீட்டு வாடகைப்படி, மாநில அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 40 விழுக்காடு ஊதிய உயர்வு; அலுவலர்- ஆசிரியர் ஊதிய மாற்றத்தில் முரண்பாடுகள் இருப்பின் அதைத் தீர்க்க ஒரு நபர் குழு. சென்னை மாநகரத்தை ஏ1 நகரமாக மாற்ற மத்திய அரசுக்குக் கோரிக்கை; உயிருக்குத் துணிந்து ணிந்து பணியாற்றும் காவலர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு விருது, பதவி உயர்வு, பொற்கிழி;
தேங்காய், கொப்பரை, பேக்கரிகளில் தயாரிக்கப்படும் வணிகச் சின்னம் இல்லாத உணவுப்பொருள்கள், மசாலாப் பொடி, ஐஸ்கிரீம், பட்டாணி மாவு போன்றவைகளுக்கு வரிக் குறைப்பு; சமையலுக்குப் பயன்படும் எண்ணெய்கள், காசினிக் கீரை, கணினி மென்பொருள், மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகம் போன்றவற்றிற்கு முழுக்க வரி விலக்கு; இன்னும் சிலவற்றைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றுக்கு எல்லாம், என்னுடைய என்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியிலே அவற்றைப் பற்றி விளக்குவேன். இவற்றையும், இவற்றிற்கு மேலாக வேறுபல நல்வாழ்வுத் திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் உள்ளடக்கித்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
நம்முடைய திரு.சுப்பராயன் அவர்கள் பேசும்போது பெண்ணுக்கு எல்லா அலங்காரமும் செய்து பொட்டு வைக்க மறந்துவிட்டார், விட்டுவிட்டார் முதல்வர் என்று சொன்னார்கள். ஒருவேளை அது முஸ்லீம் பெண்ணாக இருக்குமோ என்று திரு.அப்துல் லத்தீப் அவர்கள் எண்ணக்கூடும். பொட்டு எவ்வளவு வைக்கப்பட்டது. பொட்டு ஒரு சீராகத்தான்