உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

நிதிநிலை அறிக்கை மீது

நம்முடைய நண்பர் அப்துல் சமது அவர்கள்கூட ஓர் உருக்கமான, கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்கள் அதிலே இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி அப்பாவிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியை அதிலும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வேறு சில இஸ்லாமியப் பெரியவர் களும் எனக்குத் தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் இதைத் தெரிவித்திருக்கின்றார்கள். அன்று மிகுந்த உணர்ச்சி யோடு, உருக்கத்தோடு, லத்தீப் அவர்கள் இங்கே பேசினார்கள். அதே உணர்ச்சியும், உருக்கமும் எனக்கும் உண்டு என்பது அவர்களுக்கும் தெரியும், இந்த அவையிலே உள்ள அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும். இதுபோன்ற குற்றவாளிகளை, தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்காகக் காவல் துறையினர் ஈடுபடுகிற நேரத்தில் சிலநேரங்களில் திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நல்லவர்கள் கூடச் சிக்கி விடுவது உண்டு. விவரம் தெரிவிக்கப்பட்டால், உண்மை உணர்ந்தால், அவர்கள் உடனடியாக விடுவிக்கப் படுவார்கள். திருச்சி சிறையிலேகூட, அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 5,6 இளைஞர்கள் அங்கே வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அன்று மாலையே உடனடியாக திருச்சி சிறைச் சாலைக்குத் தொடர்புகொண்டு, காவல் துறைக்குத் தொடர்பு கொண்டு, அவர்களை விடுவிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருக்கின்றேன் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, அப்பாவிகளைத் துன்புறுத்த வேண்டுமென்பதில்லை. எனக்கு அல்ல, திராவிட இயக்கத்திற்கு, இந்த இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு, பெரியார் வழிவந்து இந்த இயக்கத்தை வழி நடத்திய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு, அவர் வழி நின்று இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற எங்களுக்கெல்லாம், சிறுபான்மை சமுதாயத்தின்மீது, இஸ்லாமியர் என்றாலும், கிறிஸ்துவர் என்றாலும், இத்தகைய சிறுபான்மை சமுதாயத்தினர் மீது உள்ள அக்கறையும், அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கின்ற ஆர்வமும் யாரும் உணராதவைகள் அல்ல. என்னைப் பொறுத்தவரையிலே, இளமைக் காலத்திலேயே திருவாரூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக்