38
நிதிநிலை அறிக்கை மீது
பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை 2 ரூபாய். அந்த பாட்டிலுடைய மூடிக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை 25 காசு. லேபிள் போட அரசு அனுமதித்துள்ளது 5 காசு. பேக்கிங் மெட்டிரியல் அரசு அனுமதித்துள்ளது 17 காசு. டிரான்ஸ்போர்ட் 30 காசு. வேஸ்ட் 4 காசு. இவையன்னியில் வெளிப்படை யாகவே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ள லாபம் 29 காசு. ஆக ரூ.3.95 காசு என்ற வகையில் அது வருகிறது
-
காலி பாட்டிலுக்கு 2 ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது இதிலே மாத்திரம் அவர்களுக்கு 1.25 ரூபாய் லாபம் கிடைக்கிறது. அந்த அதிபருக்கு லாபம் கிடைக்கிறது. ஏனென்றால் குறைந்த விலைக்கு பழைய பாட்டில்களை அவர்கள் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் அவர்கள் வாங்கியிருக்கின்ற பாட்டில்களின் கணக்கைப் பார்த்தால் அவர்கள் 60,000 பாட்டில்கள் வாங்கினோம். ஒரு லட்சம் பாட்டில்கள் வாங்கினோம் என்று எழுதியுள்ள கணக்குகளைப் பார்த்தால் அவர்கள் திருப்பித் திருப்பி அந்த பழைய பாட்டில்களைக் கடையில் இருந்து வாங்கியிருப்பார்கள் - புதிய பாட்டில்களை வாங்கியிருப்பது குறைவாகத்தான் இருக்கும். அப்படியே புதிதாகப் போய் பாட்டில்களை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு பாட்டிலுக்கு விலை 1 ரூபாய் 1 தானே தவிர, இரண்டு ரூபாய் அல்ல. ஆகவே 1 ரூபாய் லாபம் அதிலே கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
க
-
மூடிக்கு 25 காசு என்று அனுமதிக்கப்பட்டுள்ளது இதிலே அதிக பட்சம் அந்த மூடிக்கு 15 காசு என்று வைத்துக் கொள்ளலாம். ஆகவே, அதிலே 10 காசு லாபம் கிடைக்கிறது. பேக்கிங் மெட்டீரியல்ஸ் இது வார்த்தை அலங்காரம்தானே தவிர பேக்கிங் மெட்டீரியல்ஸ் என்று என்ன செய்யப் படுகிறது. நம்முடைய சோடா, கலர், ஆரஞ்சு வியாபாரிகள் போட்டு அனுப்புகிறார்களே அப்படிப்பட்ட மரப்பெட்டிகளில் அவைகள் வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதற்கு 17 காசா! அதிலே 15 காசு மிச்சம். காரணம் நிரந்தரமாக அந்தப் பெட்டியை அவர்கள் செய்து வைத்து இருக்கின்றார்கள்