கலைஞரின் சட்டமன்ற உரைகள்
37
இல்லாமல் இருந்தாலும்கூட, அந்தக் கருத்தை எடுத்துச் சால்லி வருகிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிக்குப் பதிலாக, அதற்கு ஈடான தொகையை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நான் நிருபர்கள் பட்ஜெட்டைப் பற்றிக் கேட்டபோதுகூட சொன்னேன். இந்த பிளென்டிங், பாட்டிலிங் தொழிற்சாலைகளை மாவட்ட சாராய விற்பனை உரிமங்களை அரசே நடத்தி அல்லது கூட்டுறவுத்துறை மூலம் நடத்தினால், தனிப்பட்டோர் அடிக்கின்ற கொள்ளை லாபங்களைத் தடுத்து நிறுத்தலாம் என்று கூறி இருக்கிறேன்.
நான் ப்ளன்டிங் அன்ட் பாட்டிலிங் என்று ஆரம்பிக்கிற நேரத்தில், தயவு செய்து யாரும் குறுக்கிட வேண்டாம். அது குறித்த பல விவரங்கள் இராமமூர்த்தி கமிஷனில் ஆய்வில் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். அதைப்பற்றி நான் எதுவும் பேசப்போவது இல்லை. சில புள்ளி விவரங்களை மாத்திரம் நான் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சி,
ளும் கட்சி மற்றும் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சொல்ல விரும்புகிறேன்.
ப்ளன்டிங் அன்ட் பாட்டிலிங் தொழிற்சாலைக்கு, 750 எம்.எல். கொண்ட பாட்டில் கொண்ட சாராயத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள விலை 7 ரூ. 41 காசு. 750 எம்.எல் கொண்ட ஒரு பாட்டிலுக்கு ப்ளன்டிங் அன்ட் பாட்டிலிங் தொழிற் சாலைக்கு இந்த அரசாங்கம் அனுமதித்துள்ள விலை 7 ரூ. 41 காசு. இதிலே சில பிரேக்அப் சில சில பகுதிகளாக சில சில விவரங்களைச் சொல்ல விரும்புகிறேன். இந்த ரூ.7.41 காசில் எக்சைஸ் டியூடி 3 ரூபாய் நியாயம். விற்பனை வரி 44 காசு- ஏற்றுக் கொள்கிறேன். சர்சார்ஜ் 2 காசு தவறு இல்லை. வரியாக 3 ரூபாய் 46 காசு மொத்தம். 7 ரூபாய் 41 காசில் இந்த 3 ரூபாய் 46 காசு போனால் மீதமுள்ள 3 ரூபாய் 95 காசு இருக்கிறதே, அதை நாம் கவனிக்க வேண்டும். இந்த 3 ரூபாய் 95 காசில் காஸ்ட் ஆப் ஸ்பிரிட் எரிசாராயத்தின் விலை அந்த ப்ளண்டிங் தொழிற்சாலைக்கு 85 காசு. காலி
-