உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

393

1997 – 98 ஆம் ஆண்டு பொது விற்பனை வரிச் சட்டம் மற்றும் மத்திய விற்பனை வரிச்சட்டம் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது இதில் முந்தைய ஆண்டைவிட 50 இலட்சம் ரூபாய் குறைவாக இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கிடையேயான விற்பனைத் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவிலே, அதிகமாக வரி செலுத்தும் நிறுவனமாகிய South India Viscose 1997-98ஆம் ஆண்டில் பரும் பகுதி உற்பத்தி மேற்கொள்ளாத காரணத்தால் விற்பனை வரியிலே முழு அளவை எய்தவில்லை என்று அறியப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு உற்பத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள காரணத்தால் இந்தப் பிரிவில் கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்புமுள்ளது. எனவே, முன்னர் இருந்த வரி வருவாய் நிலையை எட்ட இந்த ஆண்டு வாய்ப்பு இருப்பதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு சதவீத வரியையே மேலும் ஓர் ஆண்டுக்குத் தொடர்ந்து அமல் செய்ய இந்த அரசு முடிவெடுத்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

இந்தத் தேங்காய், கொப்பரை, இதிலே ஒரு குழப்பம் தேங்காய்க்கா, கொப்பரைக்கா? இரண்டுக்குமா? அல்லது கொப்பரைக்கு மாத்திரமா? என்று. ஆங்கிலத்திலே கொப்பரை என்று மாத்திரம் அச்சடித்துவிட்டார்கள் அச்சடித்துவிட்டார்கள். அதனாலே தேங்காய்க்கு இல்லையா என்று ஒரு சந்தேகம் வந்தது எனவே தேங்காய்க்கும் உண்டு; கொப்பரைக்கும் உண்டு என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இதிலே தேங்காய் என்பதற்குப் பக்கத்திலே 'கமா' இல்லாததாலும், நான் சொன்னபடி ஆங்கிலத்திலே கொப்பரை என்று மாத்திரம் இருப்பதாலும் இந்த வரிக் குறைப்பு கொப்பரைக்கு மட்டுமா, தேங்காய்க்கும் பொருந்துமா என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில், இந்த வரிக் குறைப்பு கொப்பரைக்கு மாத்திர மல்லாமல் தேங்காய்க்கும் உண்டு என்பதைத் தெளிவாக்க விரும்புகின்றேன். மேலும், நிதிநிலை அறிக்கையில் நம் மாநிலத்திலே விற்பனை செய்யும் தேங்காய் மற்றும் கொப்பரைக்குத்தான் வணிக வரி 1 சதவீதமாகக் குறைக்கப் பட்டிருந்தது. நமது மாநிலத்திற்குள்ளே மாத்திரம். அதற்குத் தான் ஒரு சதவீதம் என்று குறைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து