உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

நிதிநிலை அறிக்கை மீது

2

தேங்காய் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தேங்காய், கொப்பரை வரி விகிதமும் 2 லிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநிலத்திற்குள்ளேயும் ஒரு பர்சன்ட்; வெளியிலே விற்றாலும் ஒரு பர்சன்ட். (மேசையைத் தட்டும் ஒலி).

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் இந்த எண்ணெயோடு பருத்தி எண்ணெயும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி. சம்பத், நம்முடைய திரு. சொக்கர், திரு. ராஜ்குமார் மன்றாடியார் போன்றவர்கள் எல்லாம் இதை வலியுறுத்தி எனக்குக் கடிதங்கள்கூட கொடுத்திருக்கின்றார்கள். சமையலுக்குப் பயன்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், இதோடு பாமாயிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ஜி. ஓ. வில் விடுபட்டுப் போய்விட்டதாக எனக்குத் தகவல். பாமாயிலையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் அனைத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தேன். இந்த விரிவிலக்கானது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை அளிக்கப்படாத சலுகையாகும். (மேசையைத் தட்டும் ஒலி) இதைத்தான் நம்முடைய திரு.தாமரைக்கனி எல்லாம் எதிர்த்து பட்ஜெட் கண்டனக் கூட்டமெல்லாம் நடத்தப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமேயானால், சமையல் எண்ணெய்க்கு கர்நாடகாவில் 5 சதவீதம் வரியும், கேரளத்திலும், ஆந்திராவிலும் 9 சதவீத வரியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. பருத்திக்கொட்டையிலிருந்து தயாரிக்கப் படும் எண்ணெய், அரிசித் தவிட்டிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அந்த இரண்டு எண்ணெய்களுக்கும் முழு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

நிதிநிலை அறிக்கையில் வணிகச் சின்னம் இல்லாத மசாலாப் பொடிகளுக்கு வரி 16 சதவிகிதத்திலிருந்து