கலைஞரின் சட்டமன்ற உரைகள்
407
அறிக்கையைப்பற்றி குறிப்பிட்டுவிட்டு, கடைசியாக முடிக்கும் போது இந்த நிதிநிலை அறிக்கையிலே, இலக்கியவாதி கலைஞரைத்தான் காண முடிகிறது. நிதியமைச்சர் கலைஞரைக் காணமுடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு இது ஒரு மகிழ்ச்சி. இலக்கியவாதி கலைஞர் சாகிற வரையிலே வாழ்வார். நிதியமைச்சர் கலைஞர் அப்படி வாழ முடியாது. இடையிலே அந்தப் பதவி போய்விடும். இலக்கியவாதி என்பதுதான் கடைசி வரையிலே நிலைக்கும். எனவே, அவர் அப்படிக் குறிப்பிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.
நம்முடைய நண்பர் ஞானசேகரனோ அல்லது திருநாவுக்கரசு அவர்களோ, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவரோ, நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர் பழனிசாமி அவர்களோ, அல்லது இந்திய தேசிய லீக்கின் தலைவர் அப்துல் லத்தீப் அவர்களோ, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே பேசிய மணி அவர்களோ, நண்பர் சந்தானம் அவர்களோ, வெங்கடசாமி அவர்களோ, பேராசிரியர் தீரன் அவர்களோ, இத்தனை பேரும் கூறிய இந்தக் கருத்துக்களையெல்லாம் எடுத்து வைத்து, என்னுடைய உரையைத் தயாரித்திருக் கின்றேன். மற்றும் பல உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களையும் சிந்தித்துப் பார்த்து, எண்ணிப் பார்த்து என்னுடைய உரை இங்கே வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்ல வேண்டும். பேசியவர்கள் அனைவரும் ஆளும் கட்சியில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் இது 12வது நிதிநிலை அறிக்கை என்பதைப் புகழ்ந்து பாராட்டிக் குறிப்பிட்டார்கள்.
1969ஆம் ஆண்டு என்னுடைய இனிய தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு என் தோள்களிலே சுமத்தப்பட்ட இந்த பெரும் பொறுப்பை நான் ஏற்று 12வது நிதிநிலை அறிக்கையை படிக்கின்ற வாய்ப்பை உங்கள் அனைவருடைய அன்பான வாழ்த்துக்களோடும், ஆதரவோடும் நான் பெற்றிருக்கின்றேன். 1969 முதல் இதுவரையில் இந்தப் பன்னிரண்டு அறிக்கைகளுக்கும்