408
நிதிநிலை அறிக்கை மீது
இடையில் உள்ள காலத்தில் மாநிலத்திற்காக வளர்ச்சித் திட்டங்கள் அன்றாடத் தேவைகளுக்கான திட்டங்கள், நிர்வாகத்திற்கான திட்டங்கள் இவை போக குறிப்பிடத்தக்க திட்டங்கள் எவையெவை நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன என்பதை நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டியதவசியம் என்றே நான் கருதுகிறேன். எனவே, அதை நினைவுபடுத்தவும் விரும்புகிறேன். 1969க்கு முன்பு இலவசக் கல்வி S.S.L.C. வரையிலே பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் வழங்கப்பட்டது.
1969லேதான் அண்ணா அவர்களுக்குப் பிறகு நான் பொறுப்பேற்ற நேரத்தில் P.U.C. வரையிலே இலவசக் கல்வி என்ற நிலையை நீட்டிக்கச் செய்தேன். 1969லேதான் பிற்படுத்தப்பட்டோருக்கான நலன்களை மேலும் விரிவாக ஆராய்ந்திட சட்டநாதன் அவர்களுடைய தலைமையிலே ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. அதனுடைய பரிந்துரைகள் பல ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1969ஆம் ஆண்டில் பிற்படுத்தப் பட்டோர் நலத் துறையும், ஆதிதிராவிடர் நலத் துறையும் ஒன்றாக இருந்தது தனித் தனியே பிரிக்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்காக பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1969லே R.A. கோபால்சாமி ஐயங்கார், I.C.S. அவர்களுடைய தலைமையில் Police Commission தமிழ்நாட்டிலே - இந்தியாவிலேயே இந்த மாநிலத்திலேதான் முதன் முதலாக போலீசாருடைய தேவைகளை உணர, பரிந்துரைக்க Police Commission அமைக்கப்பட்டது.
1967க்கு முன்பு 1933ஆம் ஆண்டு தமிழகத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சாரம். 1933ஆம் ஆண்டிலிருந்து 1966 வரையில் 20,250 கிராமங்கள் மாத்திரம்தான் மின்விளக்கு வசதி பெற்ற கிராமங்களாக இருந்தன, இன்னும் சொல்லப் போனால் 33 ஆண்டுகள் வெள்ளைக்காரர்கள் ஆட்சியும் சேர்த்து, 1966ஆம் ஆண்டு வரையிலே 33 ஆண்டுகாலத்தில் சுமார் 20,000 கிராமங்கள்தான் மின்விளக்கு ஒளி பெற்ற கிராமங்களாக இருந்தன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர்களுடைய Colonyகள் - மொத்தம் சுமார் 20,000 என்றால் 2,000 Colony-களுக்குத்தான் விளக்கு ஒளி வழங்கப்பட்டிருந்தது.