உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

411

தமிழகத்தில், அந்த 1972இல்தான் பல ஆண்டுகாலமாக இருந்த கோரிக்கை, அரசு அலுவலர்களுடைய கோரிக்கை ஒன்றை இந்த அரசு கவனித்து. இரகசியக் குறிப்பு முறை, ஒழிக்கப்பட்டு மீண்டும் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியிலே நடைமுறைக்கு வந்து, 1990ஆம் ஆண்டு மறுபடியும் அந்த இரகசியக் குறிப்பு முறையை இந்த அரசுதான் ஒழித்தது. முதலில் 1972ஆம் ஆண்டு இரகசியக் குறிப்பு முறை ஒழிக்கப்பட்டபோது, இராஜாஜி மண்டபத்திலே அரசு அலுவலர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு அதைப் பாராட்டிப் பேசினார் என்பதையெல்லாம் நான் இங்கே விவரித்துச் சொல்ல விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு பாராட்டினை அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள் இந்த அரசுக்கு வழங்கினார்கள்.

1972இல் 1,500க்கு மேற்பட்ட மக்கள் வாழும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலைத் திட்டம், அதற்குப் பிறகு 1990இல் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலைத் திட்டம், வரும் ஆண்டிலிருந்து 500 முதல் ஆயிரம் பேர் வரை மக்கள் வாழும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலைத் திட்டம்.

1973ஆம் ஆண்டு கைரிக்ஷாக்களை அகற்றி. கம்யூனிசம் தழைத்தோங்குகின்ற மாநிலங்களிலேகூட ன்னமும் நிறைவேற்றப்படாத திட்டத்தை, கைரிக்ஷாக்களை ஒழிக்கின்ற திட்டத்தை நிறைவேற்றி, மாற்றுத் திட்டமாக லவச சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கிய (மேசையைத் தட்டும் ஒலி) அரசும் இந்த அரசுதான்.

பட்டார்கள்.

அந்த ஆண்டிலேதான் பெண் காவலர்கள் நியமிக்கப் முதன்முதலாக பெண் காவலர்படை தமிழகத்திலே நியமிக்கப்பட்டதும் 1973ஆம் ஆண்டிலேதான்.

1974ஆம் ஆண்டிலேதான் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப் படுகின்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு இலட்சம் வீடு கட்டப்படும் என்று கூறி 40,000 வீடுகள் கட்டப்பட்ட