412
நிதிநிலை அறிக்கை மீது
நிலையிலே ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்
1974ஆம் ஆண்டில்தான் கோயம்புத்தூரிலே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1974ஆம் ஆண்டிலேதான், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம் இந்த ஆட்சியிலேதான் தொடங்கப்பட்டது
1974ஆம் ஆண்டிலேதான் கலப்புத் திருமண தம்பதிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்க வேண்டுமென்ற, அண்ணாவினுடைய கருத்தை ஏற்று; அதைத் தொடர்ந்து நடத்தி 1989 ஆம் ஆண்டு. கலப்புத் திருமண தம்பதிகளுக்கு 5000 ரூபாய் நிதி வழங்குவது என்று அறிவித்து நடைமுறைப்படுத்தி 1996இல் அதை 10,000 ரூபாய் என்கின்ற அளவிற்கு உயர்த்தி, 1997இல் அந்த கலப்புத் திருமணத்திலே இருவரில் ஒருவர், ஆணோ பெண்ணோ ஆதிதிராவிடர்கள் ஆக இருந்தால் அவருக்கு 20,000 ரூபாய் நிதி என்று அறிவித்திருப்பதும் இந்த அரசுதான்.
1974இல் அரசு ஊழியர் இறந்தால் 10,000 ரூபாய் குடும்பப் பாதுகாப்புத் திட்டம் என்பதை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிவித்தது (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அரசு. அந்தத் திட்டம் 1989இல் 40,000 ரூபாய் என்று ஆயிற்று.
1996இல் ஒரு லட்சம் ரூபாய் என்கிற அளவிற்கு அது உயர்த்தப்பட்டிருக்கின்றது. (மேசையைத் தட்டும் ஒலி). தமிழகத்திலுள்ள கல்லூரி மாணவர்களுடைய எண்ணிக்கை பற்றி திரு. அழகிரி எழுதிய கட்டுரையைக் கூடப் படித்தேன். படிப்பிற்காக, கல்விக்காக என்ன செய்தார்கள்? காமராஜருக்குப் பிறகு என்று கேட்டுள்ளார். நான் காமராஜரைக் குறை கூற மாட்டேன். அவர் செய்து முடித்த காரியங்கள், அல்லது அவர் செய்யத் தொடங்கிய காரியங்களை நிறுத்தாமல் தொடருவதே நாங்கள் காமராஜருக்குச் செய்கின்ற மரியாதைதான். (மேசையைத் தட்டும் ஒலி).
1966 வரையில், நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையில் தமிழகத்திலே கல்லூரி மாணவர்களுடைய