உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

இல்லையா, யாருக்குக் கொடுத்தோம்,

41

எவ்வளவு

கொடுத்தோம் என்று சொன்னதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : பெயரைத்தான் சொல்லக் கூடாது; பெயரை எடுத்துவிடலாம் என்று சொன்னேன். மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : என்பதும் விசாரணையில் இருக்கிறது.

திரு. துரைமுருகன் : கன்சர்ன்டு மினிஸ்டர் சொல்லி விட்டார்; அதன்பிறகு ஏன் இவர் குறுக்கிடவேண்டும் ? அப்படியானால் நாங்களும் குறுக்கிடவேண்டிவரும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அமைச்சரவர்கள் சொன்னதை எதிர்க்கட்சித் தவைரும் ஒப்புக் கொள்கிறார்கள். பெயரை நீக்குவதோடு ** என்பதும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : தலைவர் அவர்களே எல்லாம் இராமமூர்த்தி கமிஷன் விசாரிக்கின்ற காரணத்தால் உள் நோக்கத்தோடு கூறப்பட்ட அந்தப் பகுதியை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்

திரு. துரைமுருகன் : மந்திரி சொன்னால் உடனே நீக்கிவிட வேண்டுமா?

கலைஞர் மு. கருணாநிதி :

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : தலைவரவர்களே, அவை எல்லாம் அந்த என்குயரியில் வரும். அதனால் தான் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்று சொல்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : பினாமியில் பெற்றிருந்தால் அதுவும் 'டெர்ம்ஸ் ஆப்ஃ என்குயரி'யில் வரும் என்று அமைச்சர் திருநாவுக்கரசு சொல்கிறார்.

மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.