42
பேரவைத்தலைவர் அவர்களே,
- **
நிதிநிலை அறிக்கை மீது
மாண்புமிகு திரு. எஸ்.டி. சோமசுந்தரம் : மாண்புமிகு என்றெல்லாம் போடப் பட்ட குற்றச்சாட்டுகளைத்தான் உண்டா இல்லையா என்று விசாரிக்கத்தான் என்குயரி கமிஷன் போடப்பட்டிருப்பதாலே, அதைக் குறித்து பொதுவாகத்தான் பேசவேண்டும். ஆகவே, இது சம்பந்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னவைகளை எடுத்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இதிலே ஒன்றும் ஆட்சேபணையில்லை என்று கருதுகிறேன். ஆகவே அந்தக் கருத்துக்கள் நீக்கப்படுகின்றன.
எ
கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, எந்தக் காரணத்திற்காக ராமமூர்த்தி கமிஷன் கமிஷன் போடப் பட்டிருக்கிறது என்பதை மாண்புமிகு அமைச்சர் எஸ்.டி.எஸ். அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் அப்படி வரும்... சமயத்தில்..
ஸ்பிரிட்டிலே தண்ணீர் கலந்து கொடுப்பதனால் 20 கோடி ரூபாய் லாபம். உண்மை என்னவென்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர்தான் விலை உயர்ந்த பொருளாக இருக்கும். அதனால் எவ்வளவு லாபம் வரும் என்று சொல்ல முடியாது - அத்தோடு மாவட்ட மொத்த சாராய வியாபாரம், உரிமம் சிலருக்குத் தரப் பட்டிருக்கிறது. அதிலே உள்ள பிரச்சினைகளும் ராமமூர்த்தி கமிஷனிலே இருக்கிற காரணத்தால், அவைகளைப் பற்றியும் பேச விரும்பவில்லை. பிளண்டிங் பாட்டில்களை யூனிட்டிலே வாங்கி, சில்லரை வியாபாரிகளுக்குக் கொடுக்கிற வேலைகளுக்கு மாத்திரம் ஒரு பாட்டிலுக்கு அந்த மாவட்ட சாராய மொத்தவிற்பனை நிலையம் இருக்கிறதே,அதற்கு அரசு அனுமதித்துள்ள லாபம் 51 காசு அதன்படி 1 கோடியே 12 லட்சம் பாட்டில்களுக்கு மாதத்திற்கு 50 லட்சம் ரூபாய் அவர்களுக்கு லாபம். வருடத்திற்கு 6 கோடி ரூபாய். நான் முதலிலே சொன்ன மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.