உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

43

20 கோடியும், இந்த 6 கோடியையும் இணைத்தால் 26 கோடி ரூபாய்.

ஆக அதை அரசு உடைமையாக ஆக்கிவிட்டால் அல்லது கூட்டுறவுத் துறையின் மூலம், அந்த விற்பனையை நடத்தினால், அந்த 26 கோடி ரூபாய்க்கு வரி விதிக்க வேண்டிய நிலைமை நம்முடைய நாவலர் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். கழக ஆட்சி காலத்திலே மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது இருப்பதைப் போல ஓரளவு ரத்து செய்யப்பட்ட நிலை அப்போது அல்ல. ஒத்திவைக்கப்பட்டது பிறகு 2, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் முழுமையாக மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது கூட யோசித்தோம். அரசின் சார்பாக நடத்தலாமா என்று. 2, 3 வருடத்திற்குள்ளாக அரசு இப்படிப்பட்ட பெரிய தொழிலை எடுத்து நடத்துவது என்பது அரசுக்குப் பெரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். இப்போது அரசே எடுத்து நடத்துவதற்கு, எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அரசைப் பற்றிக் கூறப்படுகிற அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கூட கமிஷன்கள் எல்லாம் கூட வேண்டாம் இப்போதே ஒரு அறிவிப்பு - அத்தனை பிளண்டிங் பாட்டில் தொழிற்சாலைகளையும், சாராய மது வியாபாரங்களையும், அந்த ஐ.எம்.எஃப்.எஸ். தொழிற்சாலைகளையும் அரசே எடுத்து நடத்தலாம் அல்லது கூட்டுறவுத் துறை மூலம் நடத்தலாம் என்று வருமேயானால், உங்கள் மீது தூவப்படுகிற மாசுகூட மறைந்துவிடும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதைத்தான் நிதியமைச்சர் அவர்களின் இறுதி உரையிலிருந்து தெரிந்துகொள்ளவிரும்புகிறேன்

அடுத்து இதில் ஒரு வேடிக்கையான விவரம். 750 எம்.எல்.பாட்டில் 2 ரூபாய். ஆனால் 375 எம்.எல்.பாட்டில் 1 ரூ.50 காசு. 750 எம்.எல்.அளவில் பாதியளவே உள்ள 375 எம்.எல்.பாட்டில் விலை ரூ.1.50 காசு. ஆனால் 150 எம்.எல்.பாட்டில் விலை 1 ரூ.25 காசு. ஆனால் எப்படி?