உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1997-98இல்

சட்டமன்ற

419

உறுப்பினர் தொகுதி

மேம்பாட்டுத் திட்டம். ஓர் உறுப்பினருக்கு ரூ. 25 இலட்சம். 1998-99இல் அது 35 இலட்சம். இந்த ஆண்டு 50 இலட்சம். (மேசையைத் தட்டும் ஒலி).

1997-98இல் 1997 - 98இல் நமக்கு நாமே திட்டம். நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்கூட இங்கே பாராட்டினாரே, அந்த நமக்கு நாமே திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் தனி ஒதுக்கீடு 1998-99இல் 10 கோடி ரூபாய், வரும் ஆண்டிற்கும் 10 கோடி ரூபாய்.

1997-98இல் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிமுகம். அதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு 52 கோடி ரூபாய். 1998-99இல் 75 கோடி ரூபாய். வரும் ஆண்டிலும் 75 கோடி ரூபாய்.

1998ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம். 8.10.1998இல் தகவல் தொழில்நுட்பப் பணி முனைப்புக் குழு அமைப்பு. 1998ல் World Tel நிறுவன உதவியோடு தமிழகம் முழுவதும் 13,000 சமுதாய இணைய மையங்கள் Community Internet Centres அமைக்கும் திட்டம் - ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில். (மேசையைத் தட்டும் ஒலி).

1998-99ல் Mini Bus திட்டம். அது நல்லமுறையில் செயல்படுகின்றது என்றாலும் நீதிமன்றத்தினுடைய இடைக் காலத் தீர்ப்பால் எல்லா இடங்களிலும் செயல்பட முடியாத சூழ்நிலை.

-

இந்த ஆண்டு 1999இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் சென்னையிலே தொடங்கப்பட்டு, ஆறு மாநகராட்சி மன்றங்களிலும் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று எல்லா மாநகராட்சி மன்றங்களிலும் இது ஆரம்பிக்கப்பட்டது, கடந்த மாதம்தான் என்றாலும்கூட, இந்த ஒருவார காலத்தில், ஒரே நாளில், துறையினுடைய அமைச்சர் நேரு அவர்கள் நேரில் சென்றிருந்து இது ஆரம்பிக்கப்பட்டு, 6,000 மகளிர் இந்த சிறுவணிகக் கடன்

ரு