கலைஞரின் சட்டமன்ற உரைகள்
423
14 வயது வரை அனைத்து சிறார்களுக்கும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டம்.
வாழ்வொளித் திட்டம்.
ஒரு இலட்சம் பேருக்கு இலவச கண் உள் ஆடி (Intra ocular Lens) வழங்குகின்ற திட்டம்.
தமிழக வரலாற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கும் திட்டம்.
52.6 கோடி ரூபாய் செலவில் தீப்பிடிக்காத கல்நார் கூரை வீடுகள் 42,089 குடிசை வாழ் மக்களுக்குக் கட்டும் திட்டம். டெல்லியிலே தீப்பிடித்து எரிந்த பிறகு, டெல்லியிலே உள்ளவர்கள் சென்னைக்கு வந்து, இந்தத் திட்டத்தைப்பற்றி, நம்முடைய அதிகாரிகளிடத்திலே பேசி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகின்ற இடத்தையும் பார்வையிட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால், இந்தத் திட்டத்தின் பெருமையை நீங்கள் அறிந்து கொள்ளலாம் (மேசையைத் தட்டும் ஒலி) 52.6 கோடி ரூபாய் செலவில் தீப்பிடிக்காத கல்நார் கூரை வீடுகள் 42,089 குடிசை வாழ் மக்களுக்குக் கட்டும் திட்டம்.
நெசவாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை உயர்வு.
தென்மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை வரைய தனிக்குழு. இந்தத் திட்டத்தில் புதுக்கோட்டையைச் சேர்க்கவில்லை என்று தம்பி திருநாவுக்கரசும், கன்னியாகுமரியைச் சேர்க்கவில்லை என்று திரு. மணி அவர்களும் சொன்னார்கள். இரண்டு மாவட்டங் களும் இதிலே சேர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
சென்னையை அடுத்த ஒத்தியம் - துரைப்பாக்கத்தில் 37.5 கோடி ரூபாய் செலவில் 3,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கும் திட்டம்.