உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

425

ஒரு மாற்றுச் சொல்லை வைத்துக்கொள்ள முடியாது. எனவே தோழமைக் கட்சிக் கூட்டணியிலே இருக்கின்ற எல்லோரும், எல்லா தொண்டர்களும், செயல் வீரர்களும், அவரவர்களும் மனம் சுணங்குகின்ற அளவிற்கான வார்த்தைகள் வெளிப்படாமல் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்ட காரணத்தால் கடந்த காலத்திலே நாடாளுமன்றத் தேர்தலிலே நமக்கு ஏற்பட்ட அனுபவம், தொண்டர்களுடைய சோர்வினால் ஏற்பட்ட விளைவு என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். அதனால்தான் இதைச் சொல்கிறேன் அல்லாமல் வேறல்ல.

இந்த வரவு-செலவுத் திட்டத்தைப் பற்றி 'Business Standard' 10ஆம் தேதி எழுதும் போது, அந்தப் பத்திரிகையில் - ஒரு நாளேடு அதிலே குறிப்பிடுகிறது - மாநிலங்களின் திட்ட நிதி ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு, 'Pant gets tough on hike in State plan size' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் பின்வரும் கருத்தை 'Business Standard' அறிவிக்கிறது.

"Tamil Nadu has obtained a 17 percent increase in Plan size for 1999-2000 over 1998-99”, அதாவது, தமிழ்நாடு 1998-99ஆம் ஆண்டைவிட 1999-2000 ஆண்டு திட்ட ஒதுக்கீட்டிற்கு 17 விழுக்காடு கூடுதலாகப் பெற்றுள்ளது

"Yojana Bhavan sources said they were impressed by the fiscal management of the Tamil Nadu Government..."

நிதி ஆதாரங்களைக் கண்டறிந்து திட்டங்களைச் செல்வனே நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டின் திறமை பாராட்டத்தக்க முறையிலே உள்ளதாக (மேசையைத் தட்டும் ஒலி) திட்டக்குழு அலுவலகம் கருதுகிறது.

Yojana Bhavan என்றால் திட்டக்குழு அலுவலகம், அதற்கு இந்தியிலே உள்ள சொல் அது. இதை 'Business Standard' பத்திரிகை குறிப்பிடுகிறது.

‘Business Line' பத்திரிகையில், “40% of the Budgetary allocation in Tamil Nadu will go towards strengthening the economic infrastructure; 35% towards social sectors and the rest towards