426
நிதிநிலை அறிக்கை மீது
agriculture and rural development. The State expects a 6% aver- age in State Development product in 1997-98 and 1998-99".
35
வ
தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீட்டில் 40 விழுக்காடு பொருளாதாரக் கட்டமைப்பை பலப்படுத்தவும், விழுக்காடு சமூக மேம்பாட்டுத் துறைகளுக்கும், எஞ்சியவை வேளாண்மை வளர்ச்சி, கிராம வளர்ச்சி ஆகிய துறைகளின் மேம்பாட்டிற் காகவும் செலவிடப்படுகிறது. 1997-98, 1998-99 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சராசரி உற்பத்தி விகிதம் 6 விழுக்காடாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 'Business Line' கூறியுள்ளது.
இங்கே இந்த நிதிநிலை அறிக்கையிலே விவாதத்தைத் தொடங்கி வைத்த என்னுடைய நண்பர், சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அவர்கள் பேசும்போது, வறுமைக்கோட்டைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்களே, வறுமைக்கோட்டினுடைய அளவு குறைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே, எங்கே இந்த விவரம் உங்களுக்குக் கிடைத்தது என்றவொரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில் 1996-97ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை தற்போதுதானே வெளிவந்திருக்கிறது. அப்படியிருக்க 1997-98ஆம் ஆண்டிற்கான வறுமைக் கோட்டிற்குக்கீழே வாழும் மக்கள்தொகையின் விவரங்களை அரசு எவ்வாறு கண்டுபிடித்து வழங்கியுள்ளது என்று கேட்டார். நான் அவருக்குத் தருகின்ற விளக்கம் அவர் பதிலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விளக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
Evaluation and Applied Research Department TTM துறை இருக்கிறது. அவருக்கும் தெரியும். அதாவது, மதிப்பீடு மற்றும் செயல் முறை ஆராய்ச்சித் துறை.
தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அது வெளியிடுகிறது அண்மையில் 1996-97ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை அத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ஞானசேகரன் அவர்கள் கூறியதைப்போல. 1997-98ஆம் ஆண்டிற்கு மாநில பொருளாதாரத்தில் முக்கிய துறைகளின்