436
நிதிநிலை அறிக்கை மீது
வேளாண்மை, மீன்வளம், கால்நடை போன்ற துறைகளின் திட்டங்களைச் செயல்படுத்த 1,051 கோடி ரூபாயும், கைத்தறி மற்றும் துணி துறையின்கீழ் திட்டங்களைச் செயல்படுத்த 153 கோடி ரூபாயும், கதர் மற்றும் கிராமத் தொழில்களில் 21 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP), வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (EAS), ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JVVT), இந்திரா வீட்டு வசதித் திட்டம் (IAY) போன்ற மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கும், மாநில ல அரசு மாத்திரம் செயல்படுத்தும் அண்ணா
மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கும் ஊரகப் பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கும் நிதிப் பகிர்வு போன்றவற்றிற்கும் 1,538 கோடி ரூபாய் செலவிடப்படவிருக்கிறது.
கிராமப் பகுதிகள் பயன் அடையும் வகையில் பாசன வசதித் திட்டத்திற்காக வரும் ஆண்டு 335 கோடி ரூபாய் செலவிடப்படவிருக்கிறது
இதேபோல் நபார்டு வங்கி நிதியுதவியோடு செயல் படுத்தப்படும், ஊரகக் கட்டமைப்பு மேம்பாட்டு இணையத்தின் மூலம் சாலைகளுக்காகவும், கிராமச் சாலைப் பணிகளுக்காகவும் வரும் ஆண்டில் 327 கோடி ரூபாய் செலவிடப்படவிருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்கல் பணிகளுக்காக வரும் நிதி ஆண்டில் 450 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 6300 குடியிருப்புகளுக்கு முழு அளவில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு வன வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 200 கிராமங் களின் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் 97 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் ரூ. 3,755 கோடியை பல்வேறு திட்டங்களுக்கும் வருமாண்டில் ஊரகப் பகுதி மக்களுக்காக இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.