உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

நிதிநிலை அறிக்கை மீது

அரசு உருவாக்கி வருகிறது. அரசின் இந்த முயற்சிகளால் தொழில்களுக்கும் கட்டமைப்புப் பணிகளுக்கும் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. மேசையைத் தட்டும் ஒலி) ரூ. 48,497 கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது இம்முதலீடுகளால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். உதாரணமாக, மஹிந்தரா மோட்டார் வண்டிகள் துணை பாகங்கள் தொழிற்சாலை அமைப்பதால் 3,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், இவற்றைச் சார்ந்த தொழில்களில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும். திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், அதைச் சார்ந்த தொழில்களில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். 'World Tel' நிறுவனத்துடன் அமைக்கப்படவிருக்கும் இணைய மையங்களால் சுமார் 1.50 இலட்சம் பேருக்கு நேரடியாகவும் இவற்றைச் சார்ந்த தொழில்களிலும் வேலைவாய்ப்பு உருவாகும்.

ஊரக

கடந்த 2 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம், ஊரகப் பகுதிவாழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் மூலம் 4 இலட்சம் பேருக்கு ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களின்கீழ் 1,902 இலட்சம் மனித நாட்கள் (Man Days) வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, மகளிர் சிறு கடன் உதவி திட்டத்தின் மூலம் கார்ப்பரேஷன்களில் மாத்திரம் இதுவரை 6,000 பேர் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கின்றார்கள். மேலும், எல்லா நகரங்களுக்கும், மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தும் போது இலட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும்.