உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

451

அன்பில் தர்மலிங்கம் அவர்கள் முன்னின்றுதான், அந்தக் குடும்பத்தாருடன் பேசி அரசுக்கு அந்த இடத்தை பெறுவதற்கான முயற்சிகளிலே அப்போது ஈடுபட்டார். அதற்குப் பிறகு, அங்கே இராஜகோபால் தொண்டமானுடைய பெயர் அந்த மாளிகைக்கு வைக்கப்பட வேண்டுமென்ற அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு அந்தப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. அந்த மாளிகை முகப்பிலே அவருடைய சிலை வைக்கப்பட வேண்டுமென்று திருநாவுக்கரசு அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, விரைவிலே சிலை வைக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மனிதக் கழிவுகளை அகற்றுகின்றவர்கள் பற்றி நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்டது. அதுபற்றிக் கூட இங்கே அன்பில் பொய்யாமொழி பேசும்போது, நம்முடைய நண்பர் அழகிரி அவர்கள் குறுக்கிட்டு, ஏற்கெனவே உள்ள திட்டம்தான், அதற்கு என்ன நிதி ஒதுக்கியிருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டார்கள். ஒரு நல்ல திட்டத்தை வரவேற்கிற நேரத்திலே அதற்கு சிறு ஊனம் வருகின்ற அளவிற்குப் பேசுவது முறையாக இருக்க முடியாது. இருந்தாலும்கூட நான் சொல்ல விரும்பு கிறேன். ஏற்கெனவே இது மத்திய சர்க்கார் அறிவித்து, பல மாநில அரசுகளால் பின்பற்றப்படாமல், ஏற்றுக்கொள்ளப் படாமல் அப்படியே இருக்கின்ற திட்டம். நம்முடைய மாநிலம்தான் 1989இல், இந்த ஆட்சி இருந்தபோது இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று, அதற்கான Survey எல்லாம் செய்யத் தொடங்கியது. அதைப் பற்றிய விவரத்தைச் சொல்ல விரும்புகிறேன். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பின்வரும் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன; உள்ளாட்சி அமைப்புகளிலே பணிபுரிந்துவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சாலைகளைப் பெருக்குதல் போன்ற மாற்றுப் பணிகள் வழங்கப்படும். மாற்றுப் பணிகள் செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கும் உள்ளாட்சி அமைப்பு களில் பணிபுரியாத பணியாளர்களுக்கும் THADCO நிறுவனம் சொந்தமாக வியாபாரம் அல்லது தொழில் செய்ய அவர்களுக்கு உதவிட முன்வரும். துப்புரவுப் பணியாளர்களுக்கோ அல்லது