452
நிதிநிலை அறிக்கை மீது
அவர்களுடைய குடும்பத்தார்களுக்கோ, அவர்கள் விரும்பும் தொழிலில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்திற்கு ஓராண்டு வரை, மாதம் ஒன்றுக்கு ரூ. 350 உதவித் தொகை யாகவும் அளிக்கப்படும். வியாபாரம் அல்லது சுயதொழில் தொடங்க 50,000 ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும். இதில் மானியம் 50 விழுக்காடு, (அதிகபட்சம்) 10,000 ரூபாய், விளிம்புத் தொகை (Margin money), கடன் 15 விழுக்காடு, (இதற்கு வட்டி 4 விழுக்காடு), மீதி 35 விழுக்காடு வங்கிக் கடனாக வழங்கப்படும். 1989-90ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 35,561 துப்புரவுப் பணியாளர்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமாகப் பணியமர்த்தப்பட்ட 15,000, 16,000 போக மீதமுள்ள 18,000 அல்லது 20,000 துப்புரவுப் பணியாளர்களுக்கு THADCO நிறுவனத்தின் மூலம் உதவிட 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், 1 கோடியே 7 இலட்சம் ரூபாயும் இந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறுவதன் மூலம் தமிழ்நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை ஒழிக்கப்படுகிறது என்ற நல்ல செய்தியை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
உணவு உற்பத்தி வளர்ச்சியைப் பற்றி கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. இதிலே மொத்த உற்பத்தி வளர்ச்சி 1997-98ஆம் ஆண்டின் அளவான 6.31 விழுக்காட்டோடு ஒப்பிடும்போது 1998-99ஆம் ஆண்டில் 6.78 விழுக்காட்டை எட்டும் நிலையிலே உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 98 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மகிழ்ச்சியோடு குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றிப் பேசிய நம்முடைய சுப்பராயன் அவர்கள், இதை நான் பாராட்டுகிறேன், ஆனால் இந்த வளர்ச்சிக்கு, இந்த விளைவுக்கு 98 இலட்சம் டன் உங்களுக்குக் கிடைப்பதற்கு