கலைஞரின் சட்டமன்ற உரைகள்
45
நான் வேதனையோடு சொல்கிறேன் - அதிலேகூட மண்டல் கமிஷன் அறிக்கைக்கு விரோதமான கருத்துக்கள் எழுதப்படுகின்ற அந்தக் காட்சியைக் காண்கின்றபோது த்தகைய முரண்பாடு பெயரால் அண்ணாவின் நடைபெறுகின்றது என்பதை
எ
ய
நான் வருத்தத்தோடு
சொல்லாமல் இருக்க முடியவில்லை. மண்டல் கமிஷன் அறிக்கையைத் தயாரித்து பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் அளித்தபோது, திரு. மண்டல் அவர்கள் கூறிய உருக்கம் மிகுந்த வாசகத்தை நான் இங்கே படிக்க விரும்புகிறேன். "இந்திய அரசியல் சட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வகை செய்திருந்தும் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பங்கு மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருக்கின்றது. உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள், வெளிநாட்டு தூதர் பதவிகள், மத்திய மாநில தேர்வாணைக்கழக பதவிகள், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் பதவிகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மேலும் எனக்கு முன்னால் அமைக்கப்பட்ட கலேல்கர் கமிஷன் பரிந்துரைக்கு ஏற்பட்ட கதிதான் என்னுடைய கமிஷன் பரிந்துரைக்கும் ஏற்படுமோ என்று என்னிடம் சாட்சியம் அளித்த பெரும்பான்மையோர் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்தியக் குடிமக்களில் பெரும் பான்மையோராக உள்ளவர்களின் சமூகரீதியாலும், கல்வித் துறையாலும் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளவர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்படுமோ என்ற கவலையோடு இருக்கிறேன்” என்று பரிந்துரையை திருமதி இந்திரா காந்தி அவர்களிடத்திலே கொடுத்து இப்படிக் கருத்துக்களைச் சொன்னார்கள். திரு. மண்டல் அவர்கள் காலமாகி விட்டார்கள். அவர்களுடைய பரிந்துரையும் காலமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதை வலியுறுத்தக்கூடிய மிகப் பெரும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு.
ய
ல
சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இது எவ்வளவு முக்கியமான பணி என்பதை நாம் அறிவோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு என்பதற்குச் சில