உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

நிதிநிலை அறிக்கை மீது

ஆபத்துக்கள் இடையிலே வந்து பிறகு நீங்கி இன்றைக்கு இ ட ஒதுக்கீடுகள் இருக்கின்றன. இது மாநிலத்தைப் பொறுத்த மட்டில் உள்ள நிலை. என்னுடைய அருமை நண்பர் மாண்புமிகு திரு எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் கூட தமிழ்நாட்டிலே இட ஒதுக்கீடு நடந்து கொண்டிருக்கின்றது என்று நிருபர்கள் கூட்டம் ஒன்றில் பதிலளித்து மண்டல் கமிஷன் அறிக்கையை நான் வரவேற்கிறேன் என்று கூட அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அதற்கு முரணான பல கருத்துக்கள் சில

அமைச்சர்களால் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன. அந்தப் பயத்தின் காரணமாக ஒன்றைச் சொல்கிறேன். இது மத்திய அரசின் சார்பாகச் செய்யவேண்டிய காரியமாக நாம் வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். சில புள்ளிவிவரங்கள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், அமைச்சகங்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் எல்லாம் பணியாற்றுகின்றவர்களின் விவரத்தைப் பார்த்தால் கிரேட் ஒன் என்ற முதல் நிலை அதிகாரிகளின் பதவிகள் மொத்தம் 1,74,043,இதில் தாழ்த்தப்பட்டவர்கள் 9,885. அதாவது ஒரு இலட்சத்து 74 ஆயிரம் பேரில் தாழ்த்தப்பட்டவர்கள் 9,885 பேர். அதாவது 5.68 சதவீதம்தான். பிற்படுத்தப்பட்டவர்கள் 8,162 பேர். அதாவது ஒரு இலட்சத்து 74 ஆயிரம் பேரில் பிற்படுத்தப்பட்டோர் 8.162 பேர்தான் மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் இருக்கிறார்கள். இரண்டாம் நிலை அதிகாரிகளின் பதவிகள் மொத்தம் 9,12,786. அதிலே தாழ்த்தப்பட்டவர்கள் 1,65,964. அந்த 9 இலட்சத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் 97,029. அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் 19 சதவீதம். பிற்படுத்தப் பட்டோர் 10.63 சதவீதம்.

மொத்த பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்று கின்றவர்களின் எண்ணிக்கை அதாவது எல்.ஐ.சி. போன்ற மத்திய சார்புடைய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்று கின்றவர்களின் எண்ணிக்கை, முதல் நிலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 80,994. அதில் தாழ்த்தப்பட்டவர்கள் 3,652, பிற்படுத்தப்பட்டவர்கள் 3,719 அதாவது தாழ்த்தப் பட்டவர்கள் 4.51 சதவீதமும் பிற்படுத்தப்பட்டவர்கள்