482
நிதிநிலை அறிக்கை மீது
அரசு என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நீங்கள் தொடர்ந்து சொல்லாமல், வாபஸ் வாங்கிக்கொண்டதற்கும் நன்றி. தொடர்ந்து சொன்னால்தான் எங்களுக்கு ஆபத்து எனவே, ஒரு வருடம் வரையிலேயும் நல்ல ஆட்சியாக இருந்தது; அதன்பின்பு மோசமான ஆட்சியாகப் போய்விட்டது என்பது எதிர்க்கட்சித் தலைவருடைய கணிப்பு. நான் யாரையும் அப்படிப் பார்ப்பதில்லை நீங்கள் வேறுபாட்டோடு பார்க்கிறீர்கள். அல்லது, வெறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையிலும் யாரையும் அப்படிப் பார்ப்பதற்கு எனக்கு மனது இல்லை. நான் பழகிவிட்டேன் என்றால், விரோதியானால்கூட அந்தப் பழகிய பாசம் என்னைவிட்டுப் போகாது. அது என்னுடைய தனிக்குணம்.
நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கு வங்காளத்தில், C.P.M., C.P.I. என்று இரண்டு கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. ஆனால், அண்மையில் அவர்களுக்குள்ளே ஒரு சின்னத் தகராறு வந்தது. இப்போது என்ன ஆனது என்று தெரியாது எனக்கு. இராஜ்ய சபாவிற்கு 4 இடங்கள் காலியானது. அவற்றிலே 3 இடங்கள் C.P.M. எடுத்துக்கொண்டு. ஒரு இடத்தை C.P.I. க்குத் தர வேண்டுமென்று கேட்டார்கள். நியாயமான கோரிக்கைதான். ஏ னென்றால், ரொம்ப காலமான நட்பு; ரொம்ப காலமாக C.P.M., C.P.I., இரண்டு பேருமே அங்கே இருக்கிறார்கள். அந்த 4 இடங்களிலே ஒரு இடம் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்டார்கள். C.P.M. - ஜோதிபாசு அவர்கள் தலைமையிலேயுள்ள அந்த ஆளுங்கட்சி, அதை மறுத்துவிட்டது. அதனாலே, ஒரு மன வேறுபாடு ஏற்பட்டு, நாங்கள் வெளியிலே இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லி, வெளியே வரப்போவதாக ஒரு செய்தி முன்பு வந்தது. நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும், தயவு செய்து. ஓர் இடத்திற்காக, கூட்டணி சேர்ந்து, பிரியக்கூடிய அளவிற்கு ஆளானார்கள். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சோதனை வந்தது. டெல்லியிலே. "நீங்கள் காங்கிரஸ் கட்சியிலே இருந்து,
ரு