உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

நிதிநிலை அறிக்கை மீது

அவமானப்படுத்துகிற காரியமாகும். அவர் மாத்திரம் தி.மு.க. சார்பில் வரமாட்டார்; பீட்டர் அல்போன்ஸ் வரலாம்; ஜெயந்தி நடராஜன் வரலாம்; (சிரிப்பு) அவருக்குள்ள மான உணர்ச்சி, இவர்களுக்கெல்லாம் இல்லையா என்பதை நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் யோசிக்க வேண்டும். (மேசையைத் தட்டும் பலத்த தொடர்ந்த ஒலி).

திரு. சோ. பாலகிருஷ்ணன்: போதும், நிறுத்திக் கொள்ளுங்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு கூட்டணி என்று சொல்கிறபோது, கொடுக்கல், வாங்கல் இருக்கலாம். அதைப்போய் இப்போது அசிங்கமாகச் சொல்வது, 'நான் கொடுத்த மிட்டாயைக் கக்கு' என்று சொல்வதுமாதிரி இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மிட்டாயைக் கக்கு என்று சொல்லவில்லை; முழுக்க முழுங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்

திரு. ஜே.ஹேமச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேற்கு வங்காளத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். திரு. ஜோதிபாசு அவர்களும், C.P.I. கட்சியினுடைய தலைமையும் பேசி, அந்தப் பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டன என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அறிவார்கள் என்று நினைக்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அதனால்தான் நான் பேசும்போது ஜாக்கிரதையாகச் சொன்னேன். அப்போது ஆரம்பமானது ஒரு தகராறு; இப்போது முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன், ஜாக்கிரதையாக. னென்றால், அரசியலிலே எதுவும் நடக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

விவசாயிகளினுடைய முன்னேற்றத்திற்கு, நிதிநிலை அறிக்கையிலே எதுவுமே இல்லை என்ற விவாதத்திற்கு, நான் கேட்கிறேன்; விவசாயிகளை எல்லாம், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு அழைத்துப் பேசி, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத் தயாரித்தோமே, இது விவசாயிகளை அலட்சியப்படுத்தியதா என்பதை எண்ணிப்

வேண்டும்.

பார்க்க