உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

501

பாராட்டத்தக்க விதத்திலே பணியாற்றிய திரு. ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்

அதைப்போலவே திரு. வி.ஆர். பஞ்சமுகி என்கிற வளர்ந்து வரும் நாடுகளின் ஆய்வு மற்றும் தகவல் அமைப்பின் தலைமை இயக்குநர் அவர் இதை வரவேற்றிருக்கிறார். “The new Exim Policy announced by Mr. Murasoli Maran contains the right kind of messages with the right kind of emphasis required for the new millennium" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சீன நாட்டின் சாதனைகளையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சமீபத்திய பொருளாதார நடவடிக்கைகளையும் பின்னணியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கையில் நமது நாங்குநேரி இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமைந்திடும்.

.

நாங்குநேரியில் அமையவுள்ள உயர் தொழில்நுட்ப தொழிற் பூங்கா Special Economic Zone என்ற தகுதியைப் பெறுவதால், இந்தத் தொழிற் பூங்காவில் உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களையும், மூலப் பொருட்களையும் வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம்; உள்நாட்டுச் சந்தையிலிருந்து அவற்றை வாங்கும் போதும் வரி கிடையாது; சுங்க வரி கட்டுப்பாடுகள் இங்கு அமையும் தொழில்களுக்குப் பொருந்தாது; வங்கிச் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள் தவிர, பிற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைமுறைச் சிக்கல்களில் இருந்து ஏற்றுமதியாளர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். இதனால் நாங்குநேரி, வருங்காலத்தில் ஒரு சிறு சீனாவாக (Mini-China) மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது (மேசையைத் தட்டும் ஒலி) நாங்குநேரி உயர் தொழில்நுட்பத் தொழிற் பூங்காவில் 8,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஏற்படும், வேலைவாய்ப்பும் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிட்டும்.

தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம்: தூத்துக்குடி விமான நிலைய மேம்பாடு; சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்று வதற்கு விரிவான சாத்தியக்கூறு சாத்தியக்கூறு ஆய்வு நடத்தவும்,