உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

நிதிநிலை அறிக்கை மீது

சுற்றுச்சூழல் விளைவுகளைக் கண்காணிக்கவும் மத்திய அரசு 4 கோடியே 80 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பது; அதிநவீன வசதிகளோடு குளச்சல் துறைமுகத்தைப் பெரிய துறைமுகமாக உருவாக்க, தமிழக அரசு மலேசிய அரசோடு இணைந்து திட்ட மிட்டிருப்பது - ஆகிய இந்தப் பின்னணியில் Special Economic Zone என்ற அந்தஸ்துடன் நாங்குநேரியில் அமையவுள்ள உயர் தொழில்நுட்பத் தொழிற்பூங்கா. தென்மாவட்டங்களின் ஈர்ப்பு மையமாக விளங்கிடும் என்பதை நான் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுடெல்லியிலே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 'இந்திய மொழிகளின் மையம்' (Centre for Indian Languages) தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும், தமிழ்மொழி ஆராய்ச்சிக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்திருப்பதை அறிந்து இந்த அரசு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது. அப்பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தின் தலைவர் பேராசிரியர் நசீர் அகமதுகான் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கும் கோரிக்கையினை ஏற்று, தமிழ்மொழி இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளை விரிவுபடுத்தவும், டெல்லியிலே வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகளின் மையத்தில் தமிழ் இருக்கை (Tamil Chair) ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கென்று தனியே நிதியொதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி )

தமிழகத்தில் மொத்தம் 8 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், ஆண்டுதோறும் 7 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. தென்னை உற்பத்தியில் இந்தியாவிலேயே கேரளத்திற்கு அடுத்து தமிழகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலே உள்ள தென்னை மரங்களை நோய்களிலிருந்து காலத்தே காப்பாற்றவும், தென்னை சாகுபடியை மேம்படுத்தவும், தென்னை சாகுபடி