உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

நிதிநிலை அறிக்கை மீது

அமைப்பு ரீதியில்லாத தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலே பெரும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு அவர்களுக்கென்று நல வாரியம் ஒன்று அமைத்துள்ளது. இதில் பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளர்கள் விபத்து நிவாரணம், மகளிருக்கு மகப்பேறு நலன், பணி ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உதவிகளைப் பெற வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள தையல் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்று இவர்களுக்குத் தனித் தனியாக நல வாரியங்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது

அதைப்போலவே முடி திருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் மிகுந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில்கொண்டு அந்த இரு பிரிவினருக்கும் என தனித் தனியே நல வாரியம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)

அரசுக்குத் தேவை இல்லை என்ற நிலையில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாகக் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து, முதலில் 20 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு என்றும், பிறகு நிதிநிலை அறிக்கையிலே அதை 10 ஆண்டுகள் என்றும் குறைத்து அறிவிக்கப்பட்டது. இஃதன்னியில் இப்போது அதைப் பற்றிய விளக்கம் ஒன்றைத் தர விரும்புகின்றேன். உதாரணமாக ஒரு சர்வே நம்பரின் மொத்தப் பரப்பளவு 2 ஏக்கர் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் 30 குடும்பங்கள் வீடு கட்டியும், குடிசை போட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அவர் களுடைய அனுபவத்திலேயுள்ள மொத்தப் பரப்பளவு 1 ஏக்கர், 25 சென்ட். மீதி 75 சென்ட் இடம் காலியாக உள்ளது. 30 குடும்பங்களில் 15 குடும்பங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலும், 10 குடும்பங்கள் 7 ஆண்டுகளுக்கு மேலும், 5 குடும்பங்கள் 2 ஆண்டுகளுக்கு மேலும் குடியிருந்து வருகிறார்கள். இந்த 2 ஏக்கரும் அரசுக்குத் தேவை இல்லை என்ற நிலை இருக்கு மானால் பட்டா தர வேண்டும். அங்கு 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 15

5