உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

நிதிநிலை அறிக்கை மீது

சுமக்கும் அவல நிலை அகற்றப்பட்ட நிலை; பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம். இந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 415 கோடி ரூபாய், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிருக்காக, 10 இலட்சம் மகளிர்கள் உறுப்பினராகக் கொண்ட 58,391 மகளிர் சுய உதவிக் குழுக்கள் சேமிப்புடன் கூடிய மகளிர் சிறுவணிகர் கடன் திட்டம், கால்நடை பாதுகாப்புத் திட்டம்.

சென்னையிலே அண்ணா மேம்பாலம், நெல்லையில் ஈரடுக்குப் பாலம், திருமானூர் பாலம், கோவையில் மேம்பாலம், பாம்பன் பாலம் தொடங்கி தற்போது சென்னையில் 115 கோடி ரூபாய் செலவில் 10 மேம்பாலங்கள் (மேசையைத் தட்டும் ஒலி) தமிழகம் முழுவதிலும் 1947 முதல் 1996 வரை 195 பாலங்கள்தான்; கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 601 பாலங்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

1969 முதல் பாலாறு, பொரந்தலாறு, வரதமாநதி, மருதாநதி, பரம்பிக்குளம், ஆழியாறு, சிற்றாறு பட்டினங்கால், பொய்கையாறு, நம்பியாறு, மோர்தானா உள்ளிட்ட 55 பாசனத் திட்டங்கள். 1998இல் காவிரி நீர் ஆணையம், நடுவர்மன்றம், உச்ச நீதிமன்றம் செல்ல ஒரு பிடிப்பு. நண்பர் பழனிசாமி அவர்கள் சொன்னார்கள். காவிரி நீர்ப் பிரச்சினை உங்களது காலத்திலே தீரும் என்று கருதினோம். தீரவில்லை என்று சொன்னார்கள். என் காலமே இன்னும் தீரவில்லையே! (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். காவரி நீர்ப் பிரச்சினையில் நாம் பாதுகாப்பாக இருக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, சட்டப்பூர்வமாக அவ்வளவு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எல்லா மாநிலங்களையும்விட பேருந்துக் கட்டணம் தமிழ்நாட்டில்தான் குறைவு என்பதை அனைவரும் அறிவீர்கள். மினி பஸ் திட்டத்தின் மூலம் 3030 கிராமங்களுக்கு இன்றைக்கு பேருந்துகள் விடப்பட்டிருக்கின்றன. 1957ஆம் ஆண்டு நான் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டபோது, இந்த மினி பஸ் திட்டம் என்னுடைய மூளையிலே உதித்தது. அப்போது குளித்தலைத் தொகுதி என்பது கரூரில் தொடங்கி கிட்டத்தட்ட திருச்சி எல்லைவரை உள்ள தொகுதி. அவ்வளவு