கலைஞரின் சட்டமன்ற உரைகள்
519
பெரிய தொகுதி. அந்தத் தொகுதியிலே மிக மிக மோசமான கள்ளிக் காடுகள் நிறைந்த கிராமங்கள் ஏராளமாக உண்டு. அங்கே எல்லாம் பேருந்துகள் செல்வதில்லை. அங்கே வேன்களை, சிறு சிறு பஸ்களை, யாரோ சிலபேர், தனியார்கள் வாடகைக்கு விட்டு அதிலே 50 பேர், 100 பேர் தொத்திக்கொண்டு சென்று ஆங்காங்கே கவிழ்ந்து பல பேர் செத்து மடிந்த கொடுமைகளை எல்லாம் நான் அப்போது பார்த்திருக்கிறேன். அன்றுமுதல் எனக்கு ஒரு நினைவு. ஏன் இப்படிப்பட்ட சிறிய பஸ்களை அரசின் சார்பில் விடக்கூடாது என்று. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மினி பஸ் திட்டத்தை நம்முடைய போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களிடத்திலே சொல்லி, அமைச்சரவைக் கூட்டத்திலே அதைப்பற்றி விவாதித்து, இன்றைக்கு 3030 மினி பஸ்கள் தமிழ்நாட்டில் விடப்பட்டு எல்லா கிராமங்களும் பெரும்பயன் அடைகின்றன.
கிராமங்களில் இருக்கின்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் - இந்தச் செயலால் அறவே வேலைவாய்ப்பு இன்மை நீங்கிவிடும் என்று நான் உறுதியளிக்க விரும்பவில்லை. இருந்தாலும் அவர்கள் வேறு திசையிலே திரும்பாமல் நல்ல திசையிலே அவர்கள் திரும்புவதற்கு விளையாட்டு மையங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று இளைஞர் நலத்துறை சார்பாக 7000 இடங்களில் தமிழ்நாட்டிலே இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக விளையாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் கிலோ அரிசி ரூபாய் 3.50க்கு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், மேலே உள்ளவர்களுக்கும் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மாத்திரம்தான் வழங்கப் படுகிறது என்கிற உண்மை உங்களுக்குத் தெரியும்
மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் 214 அமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய சர்க்கார் நிர்ணயித்த விலையைவிட லிட்டருக்கு 60 காசு குறைத்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருப்பதும், அப்படியே விற்பனையாவதும் உங்களுக்குத் தெரியும்.
தியாகிகளையும் சான்றோர்களையும் போற்றுவிக்கும் வகையில் மணிமண்டபங்கள், நினைவகங்கள், சிலைகள், நூல்கள் நாட்டுடைமை, இவைகள் எல்லாம் நடைபெற்றிருக்