உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

521

கல்விப் பிரிவிலும் சேர விரும்பும் முதல் பத்து நிலை மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியில் சேர ஒற்றைச் சாளர முறை கடைப்படிக்கப்படுகிறது.

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம், சென்னையில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் நலம் பெற குழுக்கள், பல்வேறு திட்டங்கள் - உருது அகாடமி, அதனுடைய செயல்பாடுகள், பின்னடைவு பணியிடங்கள் முன் தேதியிட்டு நிரப்ப முடிவு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 11,264 இடங்கள் பின்னடைவு இடங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, இந்த ஆண்டு முதற் கட்டமாக 2,374 இடங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. அதிலே ஆதிதிராவிடர்களுடைய இடங்கள் 1,467 என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் டெட்ராய்ட் என்று கூறக்கூடிய அளவிற்கு போர்டு, ஹூண்டாய், மிட்சுபிஷி கார் தொழிற்சாலைகள் உருவாகியிருக்கின்றன. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கரூர், தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை இராமேஸ்வரம், திருச்செந்தூர், உதகமண்டலம், கொடைக் கானல் ஆகிய நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்தை ஏற்படுத்துதல், நீர்க்கால்வாய்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றைத் தூர் வாருதல் போன்ற பணிகளை நிறைவேற்றுதல், 1,700 கோடி ரூபாய் செலவில் மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியோடு ஒரு மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட அறிவிக்கப்பட்டு, அதற்காக மத்திய அமைச்சரவை அதனுடைய ஒப்புதலையும் வழங்கியிருக்கிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

விவசாயிகளுக்கு, கழக அரசால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சலுகைகள் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், விவசாயிகளைப்பற்றி நிறைய இங்கே பேசப்பட்டிருக்கிறது. கவர்னர் உரையிலே நடைபெற்ற விவாதத்தில், குறிப்பாக வீரப்பனைப் பற்றித்தான் பேசப்பட்டது இந்த விவாதத்திலே நிறைய விவசாயிகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். வீரப்பனைப் பற்றிப் பேசியதற்குச் சில விளக்கங்களை அளித்துவிடுவது நல்லது

என்று